மத்திய கிழக்கு

நைஜீரியா- இறுதி ஊர்வலத்தில் துப்பக்கி முனையில் 25பேர் கடத்தல்

  • October 2, 2023
  • 0 Comments

நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே பொலிஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை

கேகாலை மாவட்ட பாடசாலை ஒன்றை மூட தீர்மானம்!

  • October 2, 2023
  • 0 Comments

மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்  அனுஷ்கா சமிலா அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியின் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு அருகாமையில் நிலவும் கடும் மழையினால் மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்புக்குப் பிறகு, அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

ஆசியா

யாசகம் எடுக்க சவூதிக்கு செல்லும் பாகிஸ்தானியா்கள்: 16 போ் கைது

பாகிஸ்தானின் முல்தான் நகர விமான நிலையத்தில் இவ்வாறு யாசகம் எடுப்பதற்காக சவூதி அரேபியா செல்ல முயன்ற 16 போ் கைது செய்யப்பட்ட்டுள்ளன்ர் பாகிஸ்தான் கடுமையான பொருளாதாரச் சீா்குலைவை எதிா்கொண்டுள்ளது. விலைவாசி உயா்வால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், அந்நாட்டில் பலா் யாசித்து பிழைப்பதற்காக சவூதி அரேபியாவை நோக்கி படையெடுப்பதும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் இருந்து புனிதப் பயண நுழைவு இசைவைப் பயன்படுத்தி […]

தமிழ்நாடு

காதலுக்கு மறுப்பு…பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளப்பெண்

  • October 2, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம், திருநெல்வேலியில் காதலிக்க மறுத்த 18 வயது இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் சந்தியா (18) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர், தனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் அங்கு வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், இளைஞர் ஒருவர் சந்தியாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், சந்தியாவிற்கு அடிக்கடி தொல்லை தந்துள்ளார். ஆனால், சந்தியா இளைஞரின் காதலை […]

வட அமெரிக்கா

கனேடிய பிரதமர் ட்ரூடோவை கடுமையாக சாடியுள்ள எலோன் மஸ்க்

  • October 2, 2023
  • 0 Comments

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது தெரிந்ததே. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை சீர்குலைத்தது. கனேடியர்களுக்கான விசா சேவையை இந்தியா ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. மறுபுறம், இந்தியாவில் உள்ள மூத்த தூதரக அதிகாரியை கனடா திருப்பி அனுப்பியுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் கனடா பிரதமர் ஜஸ்டிஸ் […]

இலங்கை

விமான தாமதங்கள்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் சமீபத்திய தாமதத்தினால் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக எட்டு விமானங்கள் தாமதமாக வந்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் சில விமானங்கள் தொழில்நுட்ப அல்லது […]

இலங்கை

சிறுவர்களுக்கான மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் திருமலை ஆண் அணியினர் சம்பியன்

  • October 2, 2023
  • 0 Comments

உலக சிறுவர் தினத்தையொட்டி கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட் சுற்றுப்போட்டி நேற்று (01) திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நெளபிஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிக்கு கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் (திருமதி) ஆர்.றிஸ்வானி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பி.மதனவாசகன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொன்டு சிறப்பித்தனர். இந்த கிறிகெட் […]

இலங்கை

ஆபத்தான முறையில் பயணித்த 58 பேருந்துகள் எச்சரிக்கையுடன் விடுவிப்பு!

  • October 2, 2023
  • 0 Comments

வீதிகளில் ஆபத்தான முறையில் பயணித்த 58 பேருந்துகள் கடும் எச்சரிக்கையுடன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம் இன்று பெட்டாலிங் ஜயா பகுதிக்கு பஸ்கள் மற்றும் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் உள்ள அனைத்து சட்டவிரோத உதிரிபாகங்களையும் அகற்றுமாறு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கு, சில பேருந்துகளின் உட்புறம் கிளப்புகளாகவும், சில பேருந்துகளில் விருந்துகள் நடத்த தனிப் பகுதியும் அமைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்ததாக […]

இலங்கை

தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் பெண்ணின சடலம் மீட்பு: பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த வர்த்தகரான பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார். பியகமவிற்கு அருகில் உள்ள கொட்டுன்னா ஓயாவில் இருந்து தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வர்த்தகரான குறித்த சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார். கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரொருவரும் இன்று (ஒக்டோபர் 02) பொலிஸில் சரணடைந்துள்ளார். பிரதான சந்தேக […]

ஐரோப்பா

உக்ரைன் போரால் அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • October 2, 2023
  • 0 Comments

உக்ரைனில் நடந்த போர் அண்டை நாடுகளுக்கு எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் ஒரு அரசியல் நிகழ்வு அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில் பதிவாகியுள்ளது. யூகோஸ்லாவியாவின் முன்னாள் குடியரசான ஸ்லோவாக்கியாவில் நடந்த பொதுத் தேர்தலில் ரஷ்ய சார்பு கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஸ்லோவாக்கியாவில் புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து அதன் தலைவர் ரொபர்ட் ஃபிகோ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்லோவாக்கியாவின் தற்போதைய அரசாங்கம் உக்ரைனுக்கு போர் உதவிகளை வழங்கினாலும், ராபர்ட் ஃபிகோ அதை நிராகரிக்கிறார். அதன்படி, […]