இலங்கை

ஆபத்தான முறையில் பயணித்த 58 பேருந்துகள் எச்சரிக்கையுடன் விடுவிப்பு!

வீதிகளில் ஆபத்தான முறையில் பயணித்த 58 பேருந்துகள் கடும் எச்சரிக்கையுடன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம் இன்று பெட்டாலிங் ஜயா பகுதிக்கு பஸ்கள் மற்றும் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் உள்ள அனைத்து சட்டவிரோத உதிரிபாகங்களையும் அகற்றுமாறு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு, சில பேருந்துகளின் உட்புறம் கிளப்புகளாகவும், சில பேருந்துகளில் விருந்துகள் நடத்த தனிப் பகுதியும் அமைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் பேரூந்துகளை ஏற்பாடு செய்து வீதியில் மிகவும் ஆபத்தான வகையில் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்