ஆசியா

சீனாவில் ரூ.9 லட்சம் பரிசுக்கு ஆசைப்பட்டு குடித்தே உயிரை விட்ட ஊழியர்..!

  • October 5, 2023
  • 0 Comments

சீனாவில் 9லட்சம் ரூபாய் பரிசு பணத்திற்கு ஆசைப்பட்டு அலுவலக விருந்தில், ஒரு லிட்டர் மதுபானத்தை குடித்த ஊழியர், உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வித்தியாசமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குவது சீனர்களுக்கு வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் சென்ஷன் நகரில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் சீனா மட்டுமின்றி உலகம் மட்டும் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்ஷன் மாகாணத்தைச் சேர்ந்த யாங் என்ற நிறுவன […]

பொழுதுபோக்கு

லியோ படத்தில் இருந்து முதன்முறையாக த்ரிஷாவின் படம் வெளியானது…

  • October 5, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. […]

இலங்கை

வட்டி விகிதங்களை குறைத்த இலங்கை மத்திய வங்கி!

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, துணை நிலை வைப்பு வசதி விகிதத்தை (SDFR) 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. அத்துடன் துணை நிலை கடன் வசதி விகிதத்தை (SLFR) 11 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு

திடீர் உடல் நலக்குறைவு – திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தரசன்

  • October 5, 2023
  • 0 Comments

நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு […]

இலங்கை

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம் – செல்வம் எம்பி

  • October 5, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்வதென்பது என்னைப்பொறுத்தமட்டிலே […]

இலங்கை

முல்லைத்தீவில் துப்பாக்கிகளுடன் சிக்கிய நபர்

  • October 5, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி இரண்டினை வைத்திருந்ததன் பேரிலே 34 வயதுடைய நபர் இடியன் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான […]

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை

  • October 5, 2023
  • 0 Comments

இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் ஜனாதிபதி அவர் அவ்வாறு நோக்குவாரானால் தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று மாலை கொட்டும் மழையிலும் கால்நடை பண்ணையாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 20தினங்களாக வீதியில் போராடிவருகின்றனர்.தமது கால்நடைகளையும் குடும்பங்களையும் கவனியாது 20 நாட்களாக வீதிகளில் போராடிவருகின்றனர். மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை […]

இலங்கை

பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் – நீதிக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

  • October 5, 2023
  • 0 Comments

வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கான நீதிக்கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மட்டக்களப்பில் முன்னெடுத்துள்ளனர். பகல் 12 மணியளவில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் தூபிக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உளவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னலி கொடவிற்கான சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இலங்கையில் படுகொலை […]

விளையாட்டு

உலகக் கோப்பை யாருக்கு – பிரபல ஜோதிடரின் கணிப்பு

  • October 5, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் போட்டியிடுகின்றது. இந்நிலையில், இந்த ஆண்டில் பிறந்த கேப்டனின் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று பிரபல […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த எல்லைகளில் கட்டுப்பாடுகள் – ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

  • October 5, 2023
  • 0 Comments

ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆஸ்திரியா, செக்கியா மற்றும் போலந்து ஆகியவை ஸ்லோவாக்கியாவுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எல்லைப்புற சோதனைகள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன, மேலும் அவை பத்து நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த முடிவை ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சர் கெர்ஹார்ட் கர்னர் உறுதி செய்துள்ளார். கடத்தல்காரர்கள் தங்கள் வழிகளை மாற்றுவதற்கு முன் நாம் திறம்பட கட்டுப்படுத்த வேண்டும். மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற கடத்தல் மாஃபியாவை எதிர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால்தான் ஸ்லோவாக்கியாவுடனான எல்லைக் […]