இலங்கை

அவர் என்னை ‘பெண் நாய்’ எனக் கூறினார் -டயானா கமகே குற்றச்சாட்டு

  • October 5, 2023
  • 0 Comments

தன்னைத் தகாத வார்த்தை கொண்டு அழைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மீது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். “என்னை மத்தும பண்டார பாராளுமன்றத்தில் வைத்து பெண் நாய் (bitch) என கூறினார். உண்மையில் இது வார்த்தை ரீதியிலான பாலியல் துஷ்பிரயோகமாகும். இது நாட்டிலுள்ள 52 வீதமான பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். பெண்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கின்றார்கள். இந்த எம்.பி க்களுக்கு பெண்களை அவமதிப்பதற்கான உரிமை கிடையாது. அவர் […]

இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை!

  • October 5, 2023
  • 0 Comments

கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை ஆராய்ந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அந்த மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குமாறும், அந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் […]

இலங்கை

ஐ.நா அலுவலகத்தில் கோரிக்கை மனு கையளிப்பு

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிர்வாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவுக்குக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு திங்கட்கிழமை(02) கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்ஸிற்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற […]

இலங்கை

எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து உணவின் விலையும் அதிகரிப்பு!

  • October 5, 2023
  • 0 Comments

எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்தார். இதனடிப்படையில், தேநீர் ஒன்றின் விலை  10 ரூபாவினாலும், கொத்து ரொட்டி ஒன்றின் விலை  20 ரூபாவினாலும், பிரைட் ரைஸ்  ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆசியா

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

  • October 5, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ரிங் ஆப் பெயர் என்கிற கடலுக்கு அடியில் எரிமலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில் ஜப்பான் நாடு அமைந்துள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றுவது இயல்பான ஒன்று. பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களால் ஜப்பான் நாட்டில் அவ்வப்போது சுனாமி போன்ற பேரழிவுகள் நிகழ்ந்து வருகிறது. இந்த […]

இலங்கை

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நோய் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை இந்த நாட்களில் குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படுவதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார். “தற்போது பெய்து வரும் மழையுடன், சில பகுதிகளில் குளிர் காலநிலையும், வேறு சில பகுதிகள் வெள்ளத்திலும்  மூழ்கியுள்ளன. இதன் விளைவாக பல நோய்கள் வேகமாக பரவுவதை நாங்கள் அவதானித்து வருகிறோம். […]

பொழுதுபோக்கு

விளம்பரத்தில் நடித்ததால் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட நிலை

  • October 5, 2023
  • 0 Comments

ஆன்லைன் வணிகத் தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் ‘பிக் பில்லியன்டே’ என்ற நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. அதுபோன்று இந்த ஆண்டும் ‘பிக் பில்லியன்டே’ விற்பனைக்காக விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த விளம்பரத்தில் பிளிப்கார்ட்டில் தருவது போன்ற சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று அமிதாப் பச்சன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு […]

இலங்கை

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!

  • October 5, 2023
  • 0 Comments

2022/23 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் (05.10) முடிவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 14, 2023 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு மேலும் நீடிக்கப்பட மாட்டாது என UGCயின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 2022 (2023) உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 232,797 […]

இலங்கை

ரயில் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

  • October 5, 2023
  • 0 Comments

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட புகையிரதப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்  லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி  இன்று (05.10) மாலைக்குள் ரயில்களை திறம்பட இயக்கும் பணியில் ரயில்வே திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பா

பிரதமர் ரிஷி சுனக் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

  • October 5, 2023
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டின்போது, ஸ்கொட்லாந்து முன்னாள் முதல் அமைச்சரான நிக்கோலா ஸ்டர்ஜன் குறித்து கிண்டல் செய்துள்ளார். நிக்கோலா, தான் சார்ந்த கட்சிக்காக நிதி திரட்டியதில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.அது தொடர்பாகவே ரிஷி நிக்கோலாவை கேலி செய்யும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ரிஷியின் […]