வட அமெரிக்கா

அமெரிக்காவில் பரபரப்பு – 5 மாணவர்கள் காயம்

  • October 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதனால் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் […]

பொழுதுபோக்கு

இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்… சரியான முடிவு

  • October 5, 2023
  • 0 Comments

கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. அதுவும் இந்த முறை பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இருக்கிற18 போட்டியாளர்களையும் இரண்டு குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றனர். இந்த இரண்டு வீடுகளிலும் தனித்தனியாக எவிக்சன் ப்ராசஸ் நடத்தப்பட்டு ஏழு போட்டியாளர்களை இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் தேர்வு செய்தனர். இந்த ஏழு பேருக்கும் அவர்களுடைய ரசிகர்கள் தங்களது ஓட்டுக்களை திங்கட்கிழமை முதல் கொடுக்க வருகின்றனர். முதல் வாரத்திற்கான நாமினேஷனில் […]

ஐரோப்பா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு – ஊடகவியலாளருக்கு 8 வருட சிறைத்தண்டனை

  • October 5, 2023
  • 0 Comments

ஊடகவியலாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பத்திரிக்கையாளர் மெரினா ஓவ்சியானிகோவாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ நீதிமன்றம் அவருக்கு 8 வருடங்கள் 05 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், நான்கு வருட காலத்திற்கு இணையம் உட்பட இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு தடையும் விதித்துள்ளது. 45 வயதுடைய பெண் ரஷ்ய ஆயுதப் படைகள் குறித்து தவறான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை

இலங்கை முழுவதும் 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேரை காணவில்லை

  • October 5, 2023
  • 0 Comments

நாட்டின் பல்வேறு பகுதிகயில் கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹேனி மடத்தில் பணிபுரிந்த 14 மற்றும் 15 வயதுடைய பிக்கு சிறுவர்கள் இருவர், பிபில பிரதேசத்தில் உள்ள பெண்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமிகள் இருவர், கடந்த 3ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர். இந்த 2 பெண்களும் உள்ளூர் பாடசாலை ஒன்றில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பலத்த காற்று – கடுமையாக பாதிக்கப்பட்ட விமான சேவை

  • October 5, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பலத்த காற்று காரணமாக, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, ​​செயல்பாடுகள் ஒரு ஓடுபாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை இன்று முழுவதும் தொடரலாம் மற்றும் தாமதங்கள் மற்றும் ரத்துகளை எதிர்பார்க்கலாம். எனவே, பயணி தனது விமானத்தை உறுதிப்படுத்திய பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்படுகிறார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சில இடங்களில் மணிக்கு 100 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த […]

இலங்கை

இலங்கையில் ரயில்கள் இரத்து – நெருக்கடியில் மக்கள்

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று காலை இயக்கப்படவுள்ள அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை ரயில் சாலை கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக குறித்த இரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றைய தினம் 80க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்தானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை ரயில் சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விளையாட்டு

அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளின் விபரங்களை வெளியிட்ட சேவாக்..!

  • October 5, 2023
  • 0 Comments

2023 ஐசிசி உலகக்கோப்பை நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இந்த இரு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கிரிக்பஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023  தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இன்றுமுதல் போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில், வீரேந்திர சேவாக் கிரிக்பஸ்க்கு அளித்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முக்கிய சேவையை நிறுத்த தயாராகும் கூகுள்!

  • October 5, 2023
  • 0 Comments

ஒரு காலத்தில் ரேடியோவில் பாடல் கேட்பது என்பது பெரும்பாலான மக்களின் விருப்பத்தேர்வாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்படுத்தல்களால், விஷுவல் மீடியாவை நோக்கி மக்கள் நகர்ந்தனர். இருப்பினும் இன்றளவும் ஆடியோ வடிவு நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் பாட்காஸ்ட் என்ற ஒன்று மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ளது. மக்களுக்கு விருப்பமான வகையில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்து வெளியிடும் கூகுள், சமீபத்தில் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி கூகுள் பாட்காஸ்ட் சில […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் – அகதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

  • October 5, 2023
  • 0 Comments

ஐரோப்பா ரீதியில் பொதுவான கடுமையான சூழ் சட்டம் ஒன்றை அதாவது அகதி சட்டம் ஒன்றை அமுல்படுத்தி ஜெர்மன் அரசாங்கமானது இதுவரை காலங்களும் கூட்டு கட்சிகளுடைய விசனங்களால் தாமதமாகி இருந்தது. இந்த நிலையில் ஐரோப்பா ரீதியாக அகதிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜெர்மனி நாடு தற்பொழுது உடன்பாட்டை தெரிவித்து வருகின்றது. இது தற்பொழுது ஜெர்மன் அதிபர் ஓலா சொல்ஸ் அவர்களுடைய செயற்பாட்டின் காரணமாக தற்பொழுது ஐரோப்பாவிற்கான பொதுவான கடுமையான அகதி சட்டம் ஒன்று உருவாகுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே […]

இலங்கை

சிங்கப்பூரில் காதலனை சந்தித்து நிச்சயம் குறித்து பேசிய இளம்பெண் அடுத்த நாளே மரணம்

  • October 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயது பெண் உயிரிழந்துள்ளார். எதிர் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில் இந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், அந்த பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. நூர் அஃபியா ஹிஷாம் என்ற அந்த பெண் கடந்த சனிக்கிழமை மாலை தனது வருங்கால கணவர் முகமத் ஃபௌசன் முஹத் மஸ்ரியை சந்தித்துள்ளார். “விபத்து […]