இலங்கை

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் – முற்றாக முடங்கிய யாழ்ப்பாணம்

  • October 20, 2023
  • 0 Comments

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது. தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது. தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன. […]

இந்தியா

இந்தியா – கனடா பிரச்சினை : இருநாட்டு தூதுவர்கள் வெளியேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

  • October 20, 2023
  • 0 Comments

இந்தியாவில் உள்ள தனது இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை கனடா 62 இலிருந்து 21 ஆகக் குறைத்ததன் மூலம்,  சர்வதேச மாணவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து  சென்றுள்ள நிரந்தர குடியிருப்பாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கனடாவும் 41 இராஜதந்திரிகள் வெளியேறுவதை அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, “துரதிர்ஷ்டவசமாக, இந்த வெகுஜன வெளியேற்றம் எங்கள் செயல்பாடுகளை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். குளோபல் அஃபர்ஸ் கனடா வெளியிட்ட அறிக்கையில், […]

வட அமெரிக்கா

இஸ்ரேலியர்களுக்கு விசாவை தளர்த்திய அமெரிக்கா!

  • October 20, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்கு பயணிக்கும் இஸ்ரேலியர்கள், 90 நாள்கள் அல்லது அதற்கும் குறைவாக விசா இல்லாமல் வந்து செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செப்டம்பர் 27 அன்று இஸ்ரேலை விசா தள்ளுபடி திட்டத்தில் அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 40 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய […]

வாழ்வியல்

உடலில் அதிசய மாற்றங்களை ஏற்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்!

  • October 20, 2023
  • 0 Comments

நெல்லிக்காயில் உள்ள அற்புதமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மதிப்பின் காரணமாக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. மேலும், அதில் சர்க்கரை மிகக் குறைவாகவே உள்ளது. ஆகையால் இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது பொதுவாக நெல்லிக்காய் சாறு, சட்னி, காய்கறி, ஊறுகாய் மற்றும் இன்னும் பிற வகைகளில் சமைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது. எடையைக் […]

இலங்கை

தலவாக்கலையில் நச்சு வாயுவை சுவாசித்த 09 பேருக்கு நேர்ந்தக் கதி!

  • October 20, 2023
  • 0 Comments

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஜவுளி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து நோய்வாய்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, ​​கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை, நிறுவன ஊழியர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தியதாக […]

ஐரோப்பா

பல்லாயிர கணக்கான ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நொக்கியா

  • October 20, 2023
  • 0 Comments

பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட நொக்கியா நிறுவனம், 14,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இவ்ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நொக்கியா உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இலாபமும் குறைந்துள்ளது. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில், உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனையில் பாதி அளவுக்கு நொக்கியா போனாக இருந்தது. 2010ம் ஆண்டுக்குப் பிறகு விற்பனையில் சரிவை சந்தித்தது. எனினும் முன்னணி நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாக புதுப்புது மொடல்களை அறிமுகம் […]

இலங்கை

மின் கட்டண உயர்வு : பேக்கரி உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

  • October 20, 2023
  • 0 Comments

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்திற்கு வந்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர்  ஹர்ஷன ருக்ஷான் இதனை தெரிவித்தார். இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

இணையத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள் – தைவான் தம்பதியின் புதிய முயற்சி

  • October 20, 2023
  • 0 Comments

தைவானைச் சேர்ந்த ஒரு தம்பதி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கழிவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தம்பதி கண்ணுக்கு அழகாகத் தெரியும் இடங்களில் திருமணப் புகைப்படங்களை எடுப்பதற்குப் பதிலாகக் குப்பைகளுக்கு மத்தியில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் புகைப்படங்களை அவ்வாறு எடுத்ததற்கான காரணத்தை மணப்பெண் தமது Facebook பக்கத்தில் வெளியிட்டார். தைவானில் கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவற்காகவே இவ்வாறு புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. பிறர் அந்தப் புகைப்படங்களைக் கண்டு […]

இலங்கை

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய மின் கட்டண திருத்தம் : விபரங்கள் உள்ளே!

  • October 20, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20.10) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது. அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் வருமாறு. 0-30 யூனிட்களில் இருந்து நிலையான கட்டணம்  150 முதல்  180 ரூபாவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 12 ரூபாவால் உயர்ந்துள்ளது. 31 முதல் 60 யூனிட் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 300 ரூபாயில்  இருந்து  360 ரூபாவாக  […]

உலகம்

காஸாவுக்குள் களமிறங்க தயாராகும் இஸ்ரேலியத் துருப்புகள்!

  • October 20, 2023
  • 0 Comments

இஸ்ரேலியத் துருப்புகள் விரைவில் காஸாவுக்குள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கலான்ட் இதனை கூறியிருக்கிறார். ஹமாஸ் பிரிவைத் துடைத்தொழிக்கத் தரைவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதை கலான்ட்டின் கருத்து கோடிகாட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைத் தெரிவிக்க முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) இஸ்ரேல் சென்றார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக்கும் (Rishi Sunak) இப்போது இஸ்ரேல் போயிருக்கிறார். வெளிநாட்டுத் தலைவர்களின் […]