உலகம்

வாஷிங்டன் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி!

  • October 20, 2023
  • 0 Comments

மத்திய வாஷிங்டன் மாநிலத்தில் நேற்று (19.10) அன்று 19 வயது இளைஞன் ஒருவர் நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 13,18 மற்றும் 21 வயதானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், சமூக அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் விவரித்துள்ளனர். இந்த சோகமான நிகழ்வைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைத் தீர்மானிக்க எங்கள் பிராந்திய சட்ட அமலாக்க பங்காளிகளுடன் இணைந்து முழுமையான விசாரணையை மேற்கொள்வதற்கு Toppenish […]

ஐரோப்பா

இடைத்தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த ரிஷி சுனக்கின் கட்சி!

  • October 20, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொழிற் கட்சியிடம் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இது பிரதம மந்திரி ரிஷி சுனக் மற்றும் அவரது கட்சியின் அடுத்த பொதுத் தேர்தலில் வாய்ப்புகளை மோசமாக்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. 2019 பொதுத் தேர்தலில் 24,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டி கட்சியானது தற்போது  Mid Bedfordshire என்ற நீண்டகால இடத்தை இழந்துள்ளனர்.

ஐரோப்பா

பிரான்ஸில் நான்காவது தடவையாக வெடிகுண்டு அச்சுறுத்தல்

  • October 20, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நான்காவது தடவையாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் château de Versailles கட்டிடத்துக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிரான்சில் உள்ள 15 விமான நிலையங்கள் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று Montpellier, Lille, Nantes-Atlantique, Bordeaux, Pau மற்றும் Beauvais-Tillé ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பாக, வெளியேற்றப்பட்டிருந்தன. Toulouse நகரில் உள்ளா ஆறு உயர்கல்வி பாடசாலைகள் வெளியேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில், […]

இலங்கை

சைபர் பாதுகாப்பு சட்டத்தை இவ்வருடத்திலேயே நடைமுறைப்படுத்த வாய்ப்பு!

  • October 20, 2023
  • 0 Comments

சைபர் பாதுகாப்புச் சட்டத்தை இவ்வருடத்தில் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் மதிப்பாய்வுக்கு உட்பட்டு இந்த மசோதா சமர்ப்பிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது  என அவர் கூறினார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர்  கனக ஹேரத் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

உலகம்

அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • October 20, 2023
  • 0 Comments

உலகளவில் வன்முறை மற்றும் அதிகரித்த பதற்றங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க பிரஜைகளை வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் நலன்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறை நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா பயணிகள் அடிக்கடி வரும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியது. இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்கப் பயணிகளை வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதம், உள்நாட்டு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய விதிகளை அறிவித்த ட்விட்டர் X!

  • October 20, 2023
  • 0 Comments

பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் மைக்ரோபிளாகிங் தளமான டுவிட்டர் எக்ஸ், மற்றொரு அதிர்ச்சியை பயனர்களுக்கு அளித்துள்ளது. அதாவது இந்நிறுவனம் ‘Not A Bot’ என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இனி புதிய பயனர்கள் ரீ போஸ்ட், லைக், புக்மார்க் போன்றவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த புதிய திட்டத்திற்கான சந்தா கட்டணமாக ஒரு வருடத்திற்கு 1 டொலர் என ட்விட்டர் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய திட்டம் முதலில் நியூசிலாந்து மற்றும் […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி : மின்கட்டணத்தை அதிகரிக்க கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி!

  • October 20, 2023
  • 0 Comments

இன்று (20.10) முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட கட்டணங்கள் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20.10) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கலந்தாய்வின் பின்னரான உண்மைகளை மீளாய்வு செய்ததன் பிரகாரம் சுமார் 18 வீத மின்சார கட்டணத்தை […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 20, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை

இலங்கையின் வானிலையில் பிற்பகுதியில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • October 20, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (20.10) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில்  சுமார் 75 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய […]

இலங்கை

இலங்கைக்கு IMF இடம் இருந்து கிடைக்கவுள்ள பாரிய உதவி தொகை!

  • October 20, 2023
  • 0 Comments

முதல் பரிசீலனையின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வுக்கு பின்னர் இது இடம்பெற்றுள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியின் பேரில், இலங்கைக்கு 254 மில்லியன் விசேட கொள்வனவு உரிமைகள், அதாவது சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என சர்வதேச நாணய […]