காஸாவுக்குள் களமிறங்க தயாராகும் இஸ்ரேலியத் துருப்புகள்!
இஸ்ரேலியத் துருப்புகள் விரைவில் காஸாவுக்குள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கலான்ட் இதனை கூறியிருக்கிறார்.
ஹமாஸ் பிரிவைத் துடைத்தொழிக்கத் தரைவழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதை கலான்ட்டின் கருத்து கோடிகாட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைத் தெரிவிக்க முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) இஸ்ரேல் சென்றார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக்கும் (Rishi Sunak) இப்போது இஸ்ரேல் போயிருக்கிறார்.
வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையின்போது இஸ்ரேலியப் படைகள் காஸாவுக்குள் நுழையமாட்டா என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய ராணுவப் படைகள் காஸாவிற்குள் நுழையும் உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் கலாண்ட் கூறினார்.