பொழுதுபோக்கு

தங்கலான் – ரிலீஸ் தேதியுடன் விரைவில் வருகின்றது 1.30 நிமிட டீசர்

  • October 26, 2023
  • 0 Comments

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கலான் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விரைவில் வெளியாகும் தங்கலான் டீசருடன், ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என பிஸியாக இருந்த விக்ரம், PS 2 ரிலீஸுக்கு முன்னரே பா ரஞ்சித்துடன் இணைந்தார். அதன்படி, விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தங்கலான் என்ற டைட்டில் […]

இலங்கை

மத்திய வங்கி ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த ஜூலி சங்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியமைக்காக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது கடன் தவணையை பெறுவதற்கான இலங்கையின் முயற்சி இதன்மூலம் எடுத்துக்காட்டப்படுவதாக தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்து, நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கும் ஒரு பொருளாதார நிலப்பரப்பை உருவாக்குவதற்கு அமெரிக்கா உறுதியுடன் உள்ளதாக […]

இந்தியா

இந்தியா- கனடா இடையேயான மோதலுக்கு முற்றும்புள்ளி;மீண்டும் விசா சேவை தொடக்கம்

  • October 26, 2023
  • 0 Comments

இந்தியா – கனடா விசா சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. நான்கு பிரிவுகளுக்கான விசா சேவை மட்டும் இன்று தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா – கனடா இடையேயான உறவில் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ. […]

பொழுதுபோக்கு

இப்ப எல்லாம் இவர் ஓவராத்தான் பண்ணுறாரு… 171 இல் என்ன நடக்கப்போகுதோ?

  • October 26, 2023
  • 0 Comments

ரஜினியை வைத்து படம் இயக்கப் போகும் இயக்குனர் ஒருவர் படாத பாடு பட்டு வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ரஜினி பட ஷூட்டிங்கில் கூட நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும் என ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும். இதற்கு அவருடைய வயது மற்றும் ஆரோக்கிய நிலைமை ஒரு காரணம். இதைத் தாண்டி சமீப காலமாகவே ரஜினி கதை மற்றும் கேரக்டர் தேர்விலும் அதிகமாக தலையிடுவதாக சொல்லப்படுகிறது. இதில் அதிகம் நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனவர் நெல்சன் தான். என்னதான் ரஜினி […]

இலங்கை

பாடசாலை கல்வி நடவடிக்கைக்கான 02 ஆம் தவணை நிறைவுபெற்றது!

  • October 26, 2023
  • 0 Comments

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 2023ம் ஆண்டு இரண்டாம் பள்ளி பருவத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன் (27.10) முடிவடைகிறது. மூன்றாவது பள்ளித் தவணை நவம்பர் முதலாம் திகதி  புதன்கிழமை தொடங்கவுள்ளது.

ஐரோப்பா

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை பிரிட்டன் அமைக்கும் – ரிஷி சுனக் உறுதி!

  • October 26, 2023
  • 0 Comments

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை பிரிட்டன் அமைக்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் இன்று (26.10) அறிவித்துள்ளார். AI நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிபுணர்களை நவம்பர் 1-2 திகதிகளில் Bletchley Park இல் ஒன்றுக்கூடி AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர். இந்நிலையில் AI பாதுகாப்பில் பிரிட்டன் உலகளாவிய தலைவராக இருக்க வேண்டும் என்று சுனக் விரும்புகிறார். பிரெக்ஸிட்டிற்குப் பிறகு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியிடும் […]

இலங்கை

டிஜிட்டல் மாற்றம் அவசியம் – ரணில் வலியுறுத்தல்!

  • October 26, 2023
  • 0 Comments

டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (25.10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நீண்ட காலத்துக்கு முன்னர், 1980களின் முற்பகுதியில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோது, ​​தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். அப்போது […]

இலங்கை

இலங்கை சுங்கத்திற்கு 925 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என நம்பிக்கை!

  • October 26, 2023
  • 0 Comments

இவ்வருடம் 925 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (26.10) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சிவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “2017 முதல் 2023 வரை நாங்கள் 742 பில்லியன் ரூபாய்களை வசூலித்துள்ளோம். வருவாய் வசூல் சதவீதத்தின்படி, டிசம்பர் மாதத்திற்குள் 925 பில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” […]

இலங்கை

இலங்கை சந்தையில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!

  • October 26, 2023
  • 0 Comments

இலங்கை  முழுவதும் உள்ள சந்தைகளில்  கீரி சம்பா அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில், கீரி சம்பா அரிசி கிலோ ஒன்று 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டு விலையின்படி கேரி சம்பா கிலோ கீரி சம்பா அரிசியை 260 ரூபாவிற்கு விற்பனை சயெ்ய வேண்டும். ஆனால் ஆலை உரிமையாளர்களால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் கீரி சம்பா அரிசி விவசாயிகளிடம் இருந்து நூற்றி பத்து ரூபாய்க்கு கொள்முதல் […]

இலங்கை

இலங்கையில் தேங்காய் விலை வேகமாக உயர்வு!

  • October 26, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததே தேங்காய் விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.