உலகம்

ஹங்கேரி எல்லையில் துப்பாக்கிச் சூட்டு : 6 பேர் கைது

ஹங்கேரி எல்லையில் குடியேறியவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேரை செர்பிய போலீசார் கைது செய்துள்ளனர். ஹங்கேரியின் எல்லைக்கு அருகே குடியேறியவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, செர்பிய போலீசார் ஆறு பேரை கைது செய்து தானியங்கி ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு துருக்கிய பிரஜைகளை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உலகம்

(UPDATE) கஜகஸ்தான் தொழிற்சாலையில் தீவிபத்து : பலி எண்ணிக்கை 30 ஐக் கடந்தது!

  • October 28, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் ஏற்பட்ட சுரங்கத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அத்துடுன் 18 பேர் காணாமல்போயுள்ளதாக  அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும்  அதன் உரிமையாளரான  ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறினார். மீதேன் வாயு வெடிப்பினால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொழுதுபோக்கு

ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம்? திரையுலகத்தை அதிரவிட்ட செய்தி…

  • October 28, 2023
  • 0 Comments

மூத்த நடிகையான கவிதா, ரஜினியும் நானும் ரகசிய கல்யாணம் செய்து கொண்டதாக பரவி செய்தி குறித்து பேட்டி அளித்துள்ளார். ஓ மஞ்சு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கவிதா. ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் முதல் படமான நாளை தீர்ப்பு மற்றும் அஜித் நடித்த முதல் படமான அமராவதி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கவிதா. மூத்த நடிகையான நடிகை கவிதா அண்மையில் பேட்டி […]

இலங்கை

கொழும்பு போர்ட் சிட்டியில் புதிய வரியில்லா வாய்ப்புகள்: வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகருக்குள் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கான தேவைகளை கோடிட்டுக் காட்டும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, வரி இல்லாத சில்லறை வணிகங்களை நடத்த முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். கூடுதலாக, விளம்பரதாரர் தகுதியுடையவராகக் கருதப்படுவதற்கு, வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் […]

ஆசியா

மியன்மாரில் 4.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…

  • October 28, 2023
  • 0 Comments

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையேயான கண்ட தட்டுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றி வருகிறது. இதன் காரணமாக ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் சக்திவாய்ந்தது முதல் மிதமான நிலநடுக்கங்கள் வரை பதிவாகி விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 6.5 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை […]

இலங்கை

தமிழர்கள் தொடர்பில் தவறான கருத்துக்கள் வெளியிடும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் – இரா. சாணக்கியன் காட்டம்

  • October 28, 2023
  • 0 Comments

தமிழ் மக்களுக்கு மிக மோசமாக இந்த பிக்கு கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி.,தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடக்கும் பொய்யான விடயங்களை […]

பொழுதுபோக்கு

இந்தியன் 2 அப்டேட்டுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி வெளியானது….

  • October 28, 2023
  • 0 Comments

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகவில்லை. இந்நிலையில் நாளை (அக்.29) காலை 11 மணிக்கு இந்தியன் 2 அப்டேட் வெளியாகும் என படக்குழு வித்தியாசமாக அறிவித்துள்ளது. கமல் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் […]

உலகம்

கஜகஸ்தானின் உருக்கு சுரங்கத்தில் தீவிபத்து : 25 பேர் பலி!

  • October 28, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரிய உருக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏறக்குறைய  25 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரகண்டாவில் உள்ள தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த தீவிபத்தில் சிக்கி மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும்  அதன் உரிமையாளரான  ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறினார். தீ விபத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பலப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

  • October 28, 2023
  • 0 Comments

பாபெட் புயலின் தாக்கத்தால் இங்கிலாந்தின் பலப் பகுதிகளில் மழையுடனான வானிலை நீடிக்கும் என மெட் Met office தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த வாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில்  மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன்,  மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், அபெர்டீன், அபெர்டீன்ஷைர், அங்கஸ், டண்டீ மற்றும் பெர்த் மற்றும் கின்ரோஸ் ஆகிய பகுதிகளுக்கு மேற்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாபெட் புயல் காரணமாக ஏற்கனவே அதிக நீர் நிலைகள் வெள்ள […]

இலங்கை

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : தாக்குதல்தாரி தற்கொலை!

  • October 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில்  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஏறக்குறைய 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் அன்றைய தினம் தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்று (27.10) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் […]