பொழுதுபோக்கு

ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த சூர்யா பட வீடியோ

  • October 28, 2023
  • 0 Comments

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இதையடுத்து சூர்யா 43 படத்தின் அறிவிப்பு வீடியோ […]

இலங்கை

அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • October 28, 2023
  • 0 Comments

சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்  விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர். “அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர். இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள […]

இலங்கை

இலங்கையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம்!

  • October 28, 2023
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில், அமைச்சின் செலவினத் தலையீடுகள் தோற்கடிக்கப்படுமாயின், வரவு செலவுத் திட்டம் முடிவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்பீடம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை இரண்டாம் வாசிப்பில் தோற்கடிக்காமல், வரவு செலவுத் திட்டக் குழுவின் போது அரசாங்கத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக […]

மத்திய கிழக்கு

காசா மக்களுக்கு ஆதரவாக தொடரும் போராட்டம்!

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஜோர்டானில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.  போராட்டம் தொடங்கும் முன், அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தலைநகர் அம்மான் முழுவதும் சிதறிக் கிடந்த மக்கள் ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோர்டான் மக்கள் என்றும் பாலஸ்தீனியர்களுக்காக நிற்பார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் பாலஸ்தீனியர்களின் வெற்றியையே விரும்புவதாகவும் […]

இலங்கை

பிற்பகல் வேளையில் இலங்கையின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • October 28, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும்ட  பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் […]

இலங்கை

இஸ்ரேலில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கட்டுநாயக்கா கொண்டுவரப்பட்டது!

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் மரணமடைந்த  அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது. சடலத்தை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (28.10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த திருமதி அனுலா […]

செய்தி

நடைப்பயிற்சி மேற்கொள்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • October 28, 2023
  • 0 Comments

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். நடைப்பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் ஆகும். தினசரி நடைப்பயிற்சி மேற்கோளாவது நல்லது. குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. நடைப்பயிற்சி செய்பவர்கள் காலையிலேயே பூங்காக்களிலோ அல்லது வீட்டு முற்றத்திலோ என தங்களுக்கு விருப்பமான இடத்திலோ நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். நடைப்பயிற்சியின் நன்மைகள் உடல் எடை அதிகரிப்பு உடல் […]

இலங்கை முக்கிய செய்திகள்

ஹமாஸின் முக்கிய தலைவர் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் காசா வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலை அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தரைவழி தாக்குதலையும் மெல்ல மெல்ல விரிவு படுத்தி வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தூங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசா பகுதியில் பயங்கரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் […]

பொழுதுபோக்கு

அழகு தேவதையாய் அர்ஜூன் மகள்… திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது

  • October 28, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும், ஆக்ஷனாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இந்நிலையில், இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஐஸ்வர்யா படங்களில் நடத்துள்ளார். இவர், விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லவிடவா ஆகிய படங்களில் நடித்தார். […]

இலங்கை

இலங்கையில் சோகம் – நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி மரணம்

  • October 28, 2023
  • 0 Comments

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார். ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி என்ற 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார். திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண […]