இந்தியன் 2 அப்டேட்டுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி வெளியானது….
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகவில்லை.
இந்நிலையில் நாளை (அக்.29) காலை 11 மணிக்கு இந்தியன் 2 அப்டேட் வெளியாகும் என படக்குழு வித்தியாசமாக அறிவித்துள்ளது.
கமல் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டரான சேனாபதி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதன்பின்னர் கமல் – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணையாமல் இருந்தது. ஆனால், 2017ல் இந்தியன் 2 ப்ராஜ்கெட் மூலம் மீண்டும் இணைந்தனர்.
லைகா தயாரிப்பில் கமல் – ஷங்கர் கூட்டணியில் தொடங்கிய இந்தியன் 2, அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்தது. பைனான்ஸ் பிரச்சினை, கிரேன் விபத்தில் மூன்று உதவி இயக்குநர்கள் மரணம் என ஒருகட்டத்தில் இந்தியன் 2 தடுமாறி நின்றது.
ஆனால், கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு செம்ம கம்பேக் கொடுத்தது. இதனால், உடனடியாக இந்தியன் 2 படப்பிடிப்பை விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார் ஷங்கர்.
அதன்படி, அசுர வேகத்தில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பு, சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. அதோடு கமலும் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுக்கத் தொடங்கினார். இ
தனால் இந்தியன் 2 விரைவில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகின. இரண்டாம் பாகத்தில் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் செம்ம மிரட்டலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், ரசிகர்களிடமும் அதிக ஹைப் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் மிக முக்கியமான அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “Received copy & processing..” என்ற கேப்ஷனுடன் தரமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
அதில், சேனாபதி கேரக்டரின் கையெழுத்தும் இருப்பதால், கமல் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இது இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம் எனவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதேநேரம், இந்தியன் 2 ரிலீஸ் தேதியாக இல்லையென்றால், கமலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ப்ரொமோ டீசர் ஏதேனும் வெளியாக வாய்ப்பிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 7ம் கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால், அதற்கு ஸ்பெஷலாக நேற்று KH 234 பூஜை வீடியோ வெளியானது. KH 234 டீசரும் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாகவே இந்தியன் 2 அப்டேட் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.