இலங்கை

தபால் ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம்: மட்டக்களப்பு தபால் சேவை பாதிப்பு

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என அதன் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இன்று காலை தபால் நிலையங்கள் மூடப்பட்டு கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் […]

இலங்கை

யாழில் டிப்பருடன் ஹன்ரர் ரக வாகனம் மோதி விபத்து

  • November 8, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் மருதனார்மடம் – உரும்பிராய் இடையே டிப்பரும் ஹன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று மதியம் மருதனார்மடத்தில் இருந்து உரும்பிராய் நோக்கி பயணித்த டிப்பரும் உரும்பிராய் சந்தியில இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த ஹன்ரர் ரக வாகனமுமே விபத்துக்குள்ளானதாகஇதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிப்பர் மற்றும் ஹன்ரர் வாகனத்தில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

வீடுகளை உடைத்து தங்க நகை திருட்டு : பெண்ணொருவர் உட்பட மூவர் கைது

இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவில் அதிகாலை வேளை ஆட்கள் இல்லாத நேரம் வீடு உடைத்து ஐந்தே கால் பவுண் […]

பொழுதுபோக்கு

இரகசியம் உடைத்தார் கமல்; “அதையெல்லாம் பார்க்க வேண்டும்”

  • November 8, 2023
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. […]

இலங்கை

மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக பலி

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இன்று (08) உயிரிழந்துள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹர ஜோதி மண்டல பெருவிழா இடம் பெற இருக்கின்ற நிலையில் குறித்த கோயிலில் நிறம் பூசும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பூசை உதவியாளரான குறித்த சிறுவன் கோயிலுக்கு மேல் மாடிக்குச் சென்று மின் குமிழ்களை பொருத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் மின்சாரம் […]

ஐரோப்பா

மேற்கு நாடுகள் உலகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாக: ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து மேற்கு நாடுகள் உலகப் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அத்துடன் மேற்கின் பசுமை மாற்றம் உலக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் நெருக்கடிகளைத் தூண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மாஸ்கோவிற்கு பாடம் கற்பிப்பதற்காக உலகப் பொருளாதாரத்தை அழிக்க மேற்குலகம் விரும்புவதால், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீண்ட காலத்திற்கு மறைந்துவிடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். “ரஷ்யாவிற்கு எதிரான […]

இலங்கை

இலங்கை- ஊவாவிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை

ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (12) வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வட அமெரிக்கா

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… அமெரிக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுப்பிடிப்பு

  • November 8, 2023
  • 0 Comments

இந்த உலகில் மனிதர்களுக்கு மிகப்பெரிய கவலை முதுமை அடைவது. இளமையை இழக்க விரும்பாதது ஒரு காரணம் என்றால், முதுமையினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும் அச்சுறுத்துகிறது. இந்நிலையில், மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, எலிகளின் வயதைக் குறைக்கும் சோதனை 70% வெற்றி அடைந்துள்ளதாகவும், இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் முதியவரை இளைஞராக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதனின் மரபணுவில் மாற்றம் கொண்டு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- ஒப்டஸ் நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு; மில்லியன் கணக்கான மக்கள் அவதி

  • November 8, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தொலைதொடர்பு ஜாம்பவான் என அழைக்கப்படும் ஒப்டஸ் நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் இணைய வசதிகளை பயன்படுத்த முடியாது அவதிப்பட்டனர். 10 மில்லியன் வாடிக்கையாளர்களையும் ஆயிரக்கணக்கான வர்த்தகங்களையும் கொண்டுள்ள ஒப்டஸ் நிறுவனத்தின் வலையைமைப்பில் கோளாறு ஏற்பட்டது.இதன் காரணமாக போக்குவரத்து தாமதங்கள் மருத்துவமனைகளில் தொலைபேசி சேவைகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.மேலும் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மக்கள் அவசர அழைப்பு இலங்கங்களை தொடர்புகொள்ள […]

இலங்கை

இலங்கை -விஷப்பாறை மீன்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

  • November 8, 2023
  • 0 Comments

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாறை மீன்களால் கடித்து பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மைக்காலமாக பல செய்திகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் கூறுகையில், இந்த விஷ மீன் இனம் Gonmaha-Stone Fish’ என்று அடையளாப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தப் பாறைமீன்கள் மணல் அல்லது இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற […]