வட அமெரிக்கா

80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… அமெரிக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுப்பிடிப்பு

இந்த உலகில் மனிதர்களுக்கு மிகப்பெரிய கவலை முதுமை அடைவது. இளமையை இழக்க விரும்பாதது ஒரு காரணம் என்றால், முதுமையினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும் அச்சுறுத்துகிறது. இந்நிலையில், மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, எலிகளின் வயதைக் குறைக்கும் சோதனை 70% வெற்றி அடைந்துள்ளதாகவும், இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் முதியவரை இளைஞராக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் மரபணுவில் மாற்றம் கொண்டு வந்து உயிரியல் ரீதியாக நமது உடல் உறுப்புகளின் வயதை குறைப்பதை பற்றிய சோதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.இதற்காக அவர்கள், வயதான எலியின் மீது நடத்திய சோதனையில் 70% வெற்றி அடைந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வயது குறைக்கும் ஆராய்ச்சி

நேச்சுர் இதழியில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், “பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை எடுத்து வயதான எலிக்கு செலுத்தப்பட்டது. அதில் அந்த எலியின் மரபணுவில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதயம் மற்றும் கல்லீரலின் வயது பாதியாக குறைந்துள்ளது. இந்த சோதனையை மனிதர்கள் மீது நடத்தினால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்றலாம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மனிதர்கள் மீது இந்த சோதனையை நடத்தும் போது அதில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content