இலங்கை

இலங்கை-பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ்ப்பள்ளிகளின் தேவையை கருத்தில் கொண்டு அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் பாடசாலை அதிபர்கள் அந்தந்த வலயக் கல்வி திணைக்களங்களுக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாளே இப்படியா? என்ன கொடும சார் இது…

  • November 10, 2023
  • 0 Comments

புக் மை ஷோவில் முதல் நாளே ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களுக்கான டிக்கெட் புக்கிங் எந்தவொரு காட்சிக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் பச்சை நிறத்தில் பரிதாபத்திற்குரிய நிலைமையில் உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளி நிலைமை இப்படி தான் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியாகி உள்ள இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. ஜப்பான் படத்திற்கு முதல் ஷோவில் இருந்தே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆளவிடுங்கடா […]

ஐரோப்பா

இஸ்ரேல் பாலஸ்தீன போர்: மனிதாபிமான அடிப்படையில் நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன குழுக்களுக்கும் இடையிலான சண்டையை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார், பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பாரிஸில் காஸாவுக்கான உதவிகள் குறித்த மாநாட்டில் பேசிய மக்ரோன், பயங்கரவாதத்தை “விதிகள் இல்லாமல்” நடத்த முடியாது என்று கூறியுள்ளார். இஸ்ரேல் விமானத் தாக்குதல்களால் 4,400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 10,812 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

பிரபல காமெடி நடிகர் திடீரென காலமானார்… திரையுலகினர் அஞ்சலி

  • November 10, 2023
  • 0 Comments

மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கலாபவன் ஹனீப். சினிமாவில் அறிமுகமான கலாபவன் ஹனீப், மல்லுவுட் வடிவேலுவாக காமெடியில் கலங்கடித்து வந்தார். இந்நிலையில், உடல்நிலை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கலாபவன் ஹனீப் உயிரிழந்தார். அவருக்கு வயது 63. ஆரம்ப காலங்களில் மிமிக்ரி செய்து பிரபலமான இவர், பின்னர் மறைந்த நடிகர் கலாபவனின் கலைக் குழுவில் பயணித்து வந்தார். அதன்பிறகே இவரும் தனது பெயருக்கு முன்னால் ‘கலாபவன்’ என்பதை சேர்த்துக்கொண்டார். மம்முட்டி, மோகன்லால், […]

இலங்கை

திருகோணமலை – தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெரியகுளம் மக்கள்

  • November 10, 2023
  • 0 Comments

திருகோணமலை- பெரியகுளம் பகுதியில் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி இன்று (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் பொது மக்கள் சிலர் தங்களுக்கு குடியிருப்பு மற்றும் சுயதொழில் முயற்சிக்கு அரச காணியை வழங்குமாறு கோரி குறித்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச காணி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்து பல காணிக்கச்சேரிகளுக்குச் சென்றும் நீண்டகாலமாக அரச காணிக்காக தாம் காத்திருப்பதாகவும் இதுவரை தமக்கு காணி வழங்கப்படவில்லை எனவும் […]

இந்தியா

சிகிச்சைக்காக வந்த ரவுடியை அடித்துக் கொன்ற வைத்தியர் … மருத்துவமனைக்கு தீ வைப்பு!

  • November 10, 2023
  • 0 Comments

பீகாரில் சிகிச்சை பெற வந்த ரவுடியை மருத்துவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெகுசாராய் மாவட்டம் ரூப்நகரைச் சேர்ந்த சந்தன்குமார் என்ற ரவுடிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நேற்று அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் அஜித் பஸ்வான் என்ற மருத்துவர் பணியில் இருந்தார். இந்நிலையில், ரவுடி சந்தன்குமாருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் அஜித் பஸ்வான் மறுத்ததாக தெரிகிறது. ஆத்திரம் அடைந்த ரவுடி சந்தன்குமார், மருத்துவருடன் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவியின் உயிரை பறித்த இரு மாத்திரைகள்

  • November 10, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவி ஒருவர் வௌ்ளிக்கிழமை (10) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கியதால் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலபிட்டிய மரதான பிரதேசத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலப்பிட்டிய ரேவத கல்லூரியில் கல்வி கற்கும் வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ் (வயது 13) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தியதால் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த […]

உலகம்

உலக நாடுகள் முழுவதும் பரவும் காசா – இஸ்ரேல் மோதல்!

  • November 10, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் நிலவி வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதல்கள் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக நெருக்கமான சம்பவம் ஒன்று இன்று (10.11) கனடாவின் Montreal இல் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில், மாண்ட்ரீலில் உள்ள யூத மத மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், நகரில் […]

பொழுதுபோக்கு

ரீ என்ட்ரி – “ஒரு தென்றல் புயலாகி வருதே…” பிரதீப்பின் பழிவாங்கும் படலம் ஆரம்பம்…

  • November 10, 2023
  • 0 Comments

கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் ரசிகர்கள் சோசியல் மீடியாவே கதி என கிடைக்கின்றனர். அந்த அளவுக்கு பிரதீப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது கமலுக்கும் மிகப்பெரும் பின்னடைவாக அமைந்தது. தீர விசாரிக்காமல் அவர் கொடுத்த ஒரு தீர்ப்பு இப்போது அவருக்கே சர்ச்சையாக முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து பிரதீப்புக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களும் கூடினார்கள். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே பல செய்திகள் உலா வந்தது. ஆனால் பிரதீப் தற்போது […]

பொழுதுபோக்கு

Yo Yo Honey Singh; 10 ஆண்டு காதல், 12 ஆண்டு வாழ்க்கை கசந்தது

  • November 10, 2023
  • 0 Comments

பாலிவுட்டின் பிரபலமான பாடகர் யோ யோ ஹனி சிங். பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் பள்ளி காலத்திருந்தே 10 ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி தல்வாரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். கடந்த ஆண்டு ஹனி சிங் தன்னை கொடுமைப்படுத்துவதாக டில்லி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார் ஷாலினி. அந்த மனுவில், ஹனி சிங் தன்னை உடல் அளவிலும், மனதளவிலும் பலமுறை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மது, போதைப்பொருளுக்கு அடிமையானார், அவருக்கு […]