இந்தியா

அதிர்ச்சி சம்பவம்!! குடி போதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை

  • November 10, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவருக்கும், சைஸ்தா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இதில், 2 குழந்தைகளுக்கு தாயான சைஸ்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதில் அஷ்ரஃப் மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி சைஸ்தாவையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த […]

உலகம்

சூடான் உள்நாட்டு போர்; 2நாளில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

  • November 10, 2023
  • 0 Comments

சூடானில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் 2 நாளில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 மாதங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிவிரைவு துணை ராணுவப்படை என்ற அமைப்பு தங்களையும் ராணுவத்தினர் என அறிவிக்க வேண்டும் என கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே நேரடி துப்பாக்கி சண்டைகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் படுகாயம் […]

ஐரோப்பா

போர்ச்சுகல் அதிபர் மார்ச் மாதம் தேர்தளுக்கு அழைப்பு

போர்ச்சுகல் அதிபர் நாட்டின் பிரதமர் பதவி விலகிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தை கலைத்து, திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரெபெலோ டி சோசா வியாழனன்று, நாடு மார்ச் 10 ஆம் திகதி விரைவான தேர்தலை நடத்தும் என்று கூறியுள்ளார். சோசலிஸ்ட் பிரதம மந்திரி அன்டோனியோ கோஸ்டா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது ,

மத்திய கிழக்கு

மீண்டும் காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; பரிதவிக்கும் நோயாளிகள்!

  • November 10, 2023
  • 0 Comments

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இதில் கடந்த வாரம் மருத்துவமனைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது குண்டுவீசி 15 பேர் கொல்லப்பட்டது உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது அதைத்தொடர்ந்து அல் ஷிஃபா மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல் அரசு. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் பாலஸ்தீன சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளரான அஷ்ரப் அல் குத்ரா. மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் சொல்லும் […]

பொழுதுபோக்கு

தீபாவளிக்கு வெளியாகும்… லால் சலாமின் மகிழ்ச்சியான அறிவிப்பு

  • November 10, 2023
  • 0 Comments

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்’. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி தினமான நவ.,12ம் தேதி காலை 10:45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி தினத்தில் வெளியாவதால் டீசர் வீடியோ ரஜினி […]

பொழுதுபோக்கு

லாரன்ஸை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை….

  • November 10, 2023
  • 0 Comments

ஒரு வருஷத்திற்கு 5 முதல் 7 படங்களாவது ராகவா லாரன்ஸ் படம் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சந்திரமுகி 2 படம் வெளியாகி இருந்தது. பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தனர். இதில் லாரன்ஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த சந்திரமுகி முதல் பாகத்தின் பேரையும் சேர்த்து டேமேஜ் செய்துவிட்டனர் என்ற […]

இலங்கை

கோப் குழு முன் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு

கோப் குழுவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையை கோப் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசியா

தென்கொரியாவில் ரோபோவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பரிதாபமாக பலியான ஊழியர்

  • November 10, 2023
  • 0 Comments

தென்கொரியாவில் ஏற்றுமதி மையம் ஒன்றில், பணியை எளிதாக்க ஈடுபடுத்தப்பட்ட ரோபோ ஒன்றின் தவறால், அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் தெற்கு கியாங்சாங் மாகாணத்தில் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் இருந்து தென்கொரியாவின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில், வேளாண் பொருட்களான காய்கறிளைக் கழுவுவது, பின் அவற்றை பெட்டிக்குள் அடைப்பது, அந்த பெட்டிகளை ஏற்றுமதிக்கு தயார் செய்வது உள்ளிட்ட […]

தென் அமெரிக்கா

அடுத்தடுத்து 4 முறை மாரடைப்பு; கொழுப்பு அறுவை சிகிச்சையால் பிரேசில் மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

  • November 10, 2023
  • 0 Comments

பிரேசில் நாட்டின் மாடல் யுவதி ஒருவர் அழகு பராமரிப்புக்கான அறுவை சிகிச்சையால், அடுத்தடுத்து நேரிட்ட 4 மாரடைப்புகளில் பரிதாபமாக உயிரிழந்தார். 29 வயதாகும் லுவானா ஆன்ட்ரே பிரேசில் தேசத்தின் பிரபல மாடல்களில் ஒருவர். மாடல்களின் முதலீடு அவர்களின் வாளிப்பான உடற்கட்டு என்பதால், அதனை பேணிப் பராமரிக்க லுவானாவும் ஏகப் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார். ஜீரோ சைஸ் தேகத்தை பராமரிப்பதில் சக பெண்களுக்கு முன்னோடியாகவும் அடையாளம் காணப்பட்டார். அழகு பராமரிப்புக்கு வழக்கமான உடற்பயிற்சி, உணவூட்டம் மட்டுமன்றி அறுவை சிகிச்சையையும் லுவானா […]

உலகம்

ஸ்பெயின் வலதுசாரி அரசியல்வாதி மீது துப்பாக்கிச் சூடு…!

ஸ்பெயின் வலதுசாரி அரசியல்வாதியான அலெஜான்ட்ரோ விடல்-குவாட்ராஸ் மத்திய மாட்ரிட் தெருவில் முகத்தில் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதான விடல்-குவாட்ராஸ், ஸ்பெயின் தலைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் பிற்பகல் 1:30 மணியளவில் தாக்கப்பட்டார், அவசரகால குழுவினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கருப்பு ஹெல்மெட் அணிந்திருந்த துப்பாக்கி சூடு நடத்தியவரை அடையாளம் காண கண்காணிப்பு காட்சிகள் மற்றும் சாட்சிகளின் […]