மத்திய கிழக்கு

3 நாள் போர் நிறுத்தம், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு: மத்தியஸதம் வகிக்கும் கத்தார்

  • November 16, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் 3 நாள் போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த கத்தார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று நிலையில், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் படையினர் தெரிவித்து இருந்தனர். ஆனால் காசாவில் 5 நாள் எத்தகைய தாக்குதலும் இல்லாத போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவுக்குமானால் பெண்கள் குழந்தைகள் உட்பட 70 பிணைக் […]

உலகம்

துருக்கியில் மனைவியை 41 முறை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற கணவன்!கைது செய்த பொலிஸார்

  • November 16, 2023
  • 0 Comments

துருக்கியில் உள்ள ஓட்டல் அறையில் மனைவியை ஸ்க்ரூ டிரைவரால் 41 முறை குத்திக்கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து பயங்கரமாக சண்டை போடும் சத்தம் நேற்று கேட்டது.இதனால் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அவர் அருகில் ரத்தக் களறியுடன் அவரது கணவர் […]

இலங்கை

இலங்கையில் இலத்திரனியல் மின் கட்டணமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது!

  • November 16, 2023
  • 0 Comments

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கட்டண முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இந்த முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இது எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என பொறியியலாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

பொழுதுபோக்கு

அஜித்துக்காக பயங்கரமான ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வச்ச விஜயின் அன்புத் தம்பி

  • November 16, 2023
  • 0 Comments

அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் இருப்பதாக அட்லீ கூறியுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அட்லீ, அதன்பின்னர் தளபதி விஜய்யுடன் அடுத்தடுத்து 3 படங்களில் இணைந்தார். தெறி, மெர்சல், பிகில் என விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் இருந்து அட்லீக்கு வாய்ப்புத் தேடி வந்தது. […]

வட அமெரிக்கா

கனடா பிரதமரை சுற்றிவளைத்த ஆதரவாளர்கள் – காப்பாற்றிய பொலிஸார்

  • November 16, 2023
  • 0 Comments

கனடாவில் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளனர். வான்குவரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் பிரதமர் முற்றுகையிடப்பட்டுள்ளார். உணவுவிடுதியொன்றில் பிரதமர் காணப்பட்டவேளை அந்த பகுதியை சுமார் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர். சைனாடவுனில் இது இடம்பெற்றதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக 250க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தநிறுத்தம் என கோசம் எழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன

பொழுதுபோக்கு

சாதாரணமாக பிறந்து உச்சம் தொட்ட மனிதனின் வாழ்க்கை சினிமா ஆகிறது….

  • November 16, 2023
  • 0 Comments

சமீப காலமாக பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், இசை, நடன கலைஞர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா ஆகிறது. அந்த வரிசையில் உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. ‘டெஸ்லா’ நிறுவனத்தின் அதிபரான இவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் பல மாற்றங்களை செய்ததன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். தென் ஆப்பிரிக்காவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான் மஸ்க் […]

செய்தி

இலங்கையில் பாடசாலை மாணவியின் உயிரை பறித்த மதில் – விசேட குழு நியமிப்பு

  • November 16, 2023
  • 0 Comments

வெல்லம்பிட்டி வெஹெரகொட கனிஷ்ட பாடசாலையில் குடிநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்ட கொங்கிரீட் மதில் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்னவுக்கு பணிப்புரை வழங்கியதாக அவர் கூறுகிறார். ஒரு வாரத்துக்குள் உரிய அறிக்கை கிடைத்த பின்னர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்த […]

பொழுதுபோக்கு

’தளபதி 68’ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? ஆரம்பிச்சிட்டாங்கய்யா…. ஆரம்பிச்சிட்டாங்க….

  • November 16, 2023
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று விஜய் சென்னை திரும்பினார். இந்த நிலையில், 2012-ல் வெளியான ‘லூபர்’ [Looper] படத்தின் ரீமேக் படம்தான் ‘தளபதி 68’ என்று கூறுகிறார்கள். லூபர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வெப்பநிலை – பல இடங்களுக்கு அபாய எச்சரிக்கை

  • November 16, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை அதிகமாக அதிகரித்துள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் காட்டுத் தீ அபாயம் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சில இடங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீ அபாயம் காரணமாக, குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களை உடனடியாக அந்த பகுதிகளை காலி செய்யுமாறு பாதுகாப்புப் படையினர் அண்மையில் அறிவித்திருந்தனர். இதேவேளை, மத்திய குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதால் […]

கருத்து & பகுப்பாய்வு

தமிழை வாசிக்கச் சொல்லித் தருவதன் அவசியம்

  • November 16, 2023
  • 0 Comments

பத்து இருபது வருடங்களுக்கு முன்பு பிள்ளைகளை ஹிந்தி, நடனம், பாட்டு வகுப்புகளுக்கு அனுப்புவார்கள். தற்போதைய குழந்தைகளை கீபோர்டு வகுப்பு, நீச்சல் வகுப்பு, ஸ்கேட்டிங் வகுப்பு, ஏன் கேலிகிராபி எனப்படும் கையெழுத்து அழகாக இருப்பதற்காகக்கூட தனியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தாய்மொழியான தமிழை வளர்ந்த குழந்தைகளுக்குக் கூட தப்பில்லாமல் வாசிக்கத் தெரிகிறதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. சமீபத்தில் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். எழுபத்தாறு வயதான என் பெரியப்பா அங்கே வந்திருந்த ஒரு உறவுக்கார சிறுவனை […]