முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

பதற்ற நிலையை குறைப்பதற்காக ஒன்றிணைந்த அமெரிக்க – சீனத் தலைவர்கள்

  • November 16, 2023
  • 0 Comments

அமெரிக்க – சீனத் தலைவர்கள் நீண்ட காலத்தின் பின்னர் இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற நிலையைக் குறைப்பதற்கு உறுதியளித்துள்ளனர். சான் பிரான்ஸிஸ்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் , சீன அதிபர் சி சின்பிங்கும் சந்தித்தனர். சுமார் ஓராண்டுக்குப் பிறகு இருவரும் முதல்முறையாக நேரில் சந்தித்துள்ளனர். இருதரப்புக்கும் இடையிலான விரிசல், மோதலாக மாறிவிடக்கூடாது என்று பைடன் கூறினார். அமெரிக்க-சீன இருதரப்பு உறவு உலகிலேயே மிக முக்கியமானது எனத் சீ வருணித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முடியாது […]

வாழ்வியல்

மன உளைச்சலைப் போக்கும் வழிகள்!

  • November 16, 2023
  • 0 Comments

மன அழுத்தம் என்பது நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம். நம்மைச் சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடி நமக்குத் தருவதுதான் மன அழுத்தப் பரிசுகள். மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்னை. மன உளைச்சல் என்பது மனது அளவில் மட்டுமல்லாமல், உடல் அளவிலும் பல பாதிப்பினை நமக்கு ஏற்படுத்துகிறது. மன உளைச்சலைப் போக்கும் சில எளிய வழிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. நடைப்பயிற்சி: அலுவலகங்களில் அல்லது பணியிடங்களில் ஏற்படும் மன […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை

  • November 16, 2023
  • 0 Comments

கடும் வெப்பத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகெங்கும் இப்போதுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 மடங்கு அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதென அனைத்துலக நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலக மக்களின் சுகாதாரம் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று குழு குறிப்பிட்டது. சுற்றுப்புறத்துக்கு மாசு ஏற்படுத்தும் எரிபொருள்கள் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் சுகாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல அம்சங்களில் அவற்றால் உண்டாகும் கடும் வெப்பமும் ஒன்று எனக் […]

செய்தி

பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைவர்கள் அறிவிப்பு..!

  • November 16, 2023
  • 0 Comments

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இடம்பெற்று குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதனால் கேப்டன் பாபர் அசாமை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர். இதைத்தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து கேப்டன் பாபர் அசாம் பதவி விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள், […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாகும் திட்டம்? பதிலளித்த ரணில்

  • November 16, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளது. இருந்தபோதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதில் தனது கவனத்தை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் விளம்பரங்கள்? புதிய திட்டத்தில் மெட்டா

  • November 16, 2023
  • 0 Comments

உலகிலேயே அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் இதுவரை விளம்பரங்கள் ஏதும் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது வரை உலக அளவில் 2.78 பில்லியன் பயனர்கள் வாட்ஸ் அப்பை பயன் படுத்துகிறார்கள். ஆனால் விரைவில் வாட்ஸ் அப்பிலும் விளம்பரங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தற்போது வாட்ஸ் அப் வெறும் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக மட்டுமே இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த தளத்திற்கு சமூக வலைதள அந்தஸ்தை உருவாக்கும் பணிகளில் மெட்டா நிறுவனம் தொடர்ந்து […]

இலங்கை

இலங்கைக்கு 2024 ஆம் ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி – Fitch Ratings வெளியிட்ட அறிவிப்பு

  • November 16, 2023
  • 0 Comments

இலங்கை 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடைவதில் அபாய நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Fitch Ratings நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டம் குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் Fitch Ratings வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தரவுகளுக்கு அமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 வீதமாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை அதனைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் Fitch Ratings நிறுவனம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு நெருக்கடி

  • November 16, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உச்சி மாநாட்டில் அகதிகள் விடயத்தில் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி நிராகரிக்கப்பட்ட அகதிகளை உடனடியாக நாடு கடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் சில தீர்மானங்களை அவர்கள் எடுத்து இருந்தார்கள். இதன் அடிப்படையில் இவ்வாறு அகதி விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் காலமானது 3 மாதம் என்றும், இந்நிலையில் எவர் ஒருவரின் அகதி விண்ணப்பம் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர் அகதி விண்ணப்பங்களை […]

ஆசியா

சிங்கப்பூரில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 16, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உணவு விநியோகிக்கப்பட்ட பையில் எலி நசுங்கிக் கிடந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை விசாரிப்பதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. Annabella Patisserie கடையிலிருந்து வாங்கிய brownies கேக் விநியோகிக்கப்பட்ட பையில் அந்த எலி இருந்ததாக Farahliza , Facebook பக்கத்தில் கூறினார். உணவு இருந்த பை மூடப்பட்டிருந்ததாகவும் வாசல் கதவில் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விநியோகிக்கப்பட்ட 3 நிமிடங்களில் அவர் பையை எடுத்துக்கொண்டார். பையிலிருந்து மோசமான வாடை வந்ததாக அவர் குறிப்பிட்டார். கேக்கை […]

ஐரோப்பா

பிரான்ஸில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

  • November 16, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி பொலிஸாால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் அவரது கணவரைக் கத்தியால் குத்தியுள்ளார். அவர்களின் இரு பெண் பிள்ளைகள் பொலிஸாரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டதோடு, அவரது மனைவியையும் கைது செய்தனர். தாக்குதலுக்கு […]