இலங்கை

யாழில் யுவதிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய உரிமையாளருக்கு விளக்கமறியல்

  • November 17, 2023
  • 0 Comments

தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள ஐஸ் கிறீம் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் […]

உலகம்

பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைப்பதில் இஸ்ரேல் வெற்றிபெறவில்லை – நெதன்யாகு!

  • November 17, 2023
  • 0 Comments

பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைப்பதில் இஸ்ரேல் வெற்றிபெறவில்லை என்று நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்க இஸ்ரேல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாகவும் ஆனால் அவை வெற்றிப்பெறவில்லை எனவும்,  பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் ஆரம்பித்து ஏறக்குறை ஒரு மாதத்தை கடந்துள்ளது. இருப்பினும் போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு சாதகமான சூழ்நிலையும் தென்படவில்லை. இவையொருப்புறம் இருக்க இருதரப்பில் இருந்தும் உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

காசாவின் முக்கிய துறைமுக்தை தங்கள் கட்டுப்பாட்டுற்குள் கொண்டுவந்த இஸ்ரேல்

  • November 17, 2023
  • 0 Comments

இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸுடன் நடத்திவரும் துப்பாக்கிச்சண்டை மூலம் காஸா நகரின் முக்கிய துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் அரசுக் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்காகக் வைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் ஹமாஸ் மறைந்திருப்பதாக இஸ்ரேல் கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் நடைபெறுகிறது. காஸாவில் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள பகுதிகளில் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் எந்நேரமும் கேட்டுக் கொண்டே […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

  • November 17, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சீக்கியர் ஒருவருக்கு எதிராக தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மானியாவில் ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை வைத்து ஜர்னைல் சிங் என்னும் சீக்கியர் நடத்தி வருபவர். இவர் மீது கடந்த 2 முதல் 3 மாதங்களாகத் தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. இது குறித்துப் பேசிய ஜர்னைல் சிங், ‘முன்பு ஒருபோதும் இதுபோன்று எனக்கு நடந்தது இல்லை. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு முறை […]

ஐரோப்பா

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் அடிப்படை சிக்கல்களை தீர்க்காது – சுயெல்லா!

  • November 17, 2023
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு சட்டவிரோத குடியேறிகளை ரூவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டத்தை புதுப்பிக்க தனது சொந்த சட்டவிரோத குடியேற்றச் சட்டத்தில் மாற்றங்களை செய்யுமாறு பிரித்தானியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் அழைப்பு விடுத்துள்ளார். “தற்போதைய சட்ட கட்டமைப்பிற்குள் படகுகளை நிறுத்த வாய்ப்பு இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வார தொடக்கத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து தனது சமீபத்திய தலையீட்டில், ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அவர் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிய மசோதாவை முன்னாள் உள்துறை செயலாளர் விமர்சித்துள்ளார். எவ்வாறாயினும், நீதிபதிகளின் […]

பொழுதுபோக்கு

விஜய் முதலில் திருமணம் செய்துகொள்ள இருந்தது இந்த பிரபலத்தின் மகளையா?

  • November 17, 2023
  • 0 Comments

தளபதி விஜய் சங்கீதாவுக்கு முன் வேறு ஒரு பிரபலத்தின் மகளை திருமணம் செய்து கொள்ள இருந்த தகவல் குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதாவது நடிகர் விஜய் முதலில் அவரின் தாய் மாமாவும், ஷோபனாவின் தம்பியும்.. பின்னணி பாடகர்மான சுரேந்தரின் மகளை தான் திருமணம் செய்து வைக்க எஸ்.ஏ.சி மற்றும் ஷோபனா முடிவு செய்ததாகவும், ஆனால் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ஏற்பட்ட காதலால் தங்களுடைய முடிவை மாற்றிக் கொண்டு சங்கீதாவுக்கே விஜய்யை திருமணம் செய்து வைத்ததாக […]

இலங்கை

யாழில் பிட்டு சாப்பிட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

  • November 17, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிடும்போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் பிட்டு சாப்பிட்ட போது  அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியுள்ளார். இதனால் வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞன் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு […]

பொழுதுபோக்கு

மீண்டும் விருந்துபடைக்க வருகின்றது லியோ…. 100 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ்

  • November 17, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படம் கடந்த மாதம் வெளியானது. படம் வெளியாகி நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு சில புதிய படங்கள் வந்ததால் அந்தப் படங்களுக்காக ‘லியோ’ படத்தை சில பல தியேட்டர்களிலிருந்து தூக்கினார்கள். ஆனால், கார்த்தி நடித்து வெளிவந்த ‘ஜப்பான்’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதோடு வெளிவந்த ராகவா லாரன்ஸ் நடித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கும் ஏ சென்டர்களில்தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு […]

செய்தி

உலகிலேயே அதிவேக இணையம் சீனாவில்

  • November 17, 2023
  • 0 Comments

சீனாவில் வினாடிக்கு 1.2 டெராபிட் வேகம் கொண்ட இணையச் சேவை தன்னிடம் உள்ளதாகச் அறிவித்துள்ளது. பல நாடுகளில் இயங்கும் இணையச் சேவையை விட இது பன்மடங்கு வேகமானது. பெய்ஜிங் நகரை அந்நாட்டுத் தெற்குப் பகுதியுடன் இணைக்கும் 3,000 கி.மீ. நீள இணையக் கட்டமைப்பை, ஹுவாவே டெக்னாலஜீஸ் கம்பெனி, சீனா மொபைல் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் அமைத்துள்ளன. இது அதன் தொழில்நுட்பத்தின் அதிநவீன சாதனை என்று சீனா பெருமிதம் அடைந்துள்ளது. ஸிங்ஹுவா பல்கலைக்கழகத்துடனும் ஸெர்நெட்காம் கார்ப் ஆய்வு […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி ஊடகப்பிரிவில் பணியாற்றிய பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – சஜித்!

  • November 17, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றிய பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார். ஜனாதிபதியுடன் நாடு திரும்பிய பின்னர் அதே வீசாவைப் பயன்படுத்தி இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினருக்கே  நாடு செல்லும் திசையில் நம்பிக்கை இல்லை என்றால், நாட்டில் உள்ள ஏனைய மக்களின் நிலைமை என்னவாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பற்றிய பெயர்கள் மற்றும் கிராமங்களுடன் […]