வேப்பம்பட்டில் பயங்கரம்… ரயில் மோதி மூவர் உடல் சிதறி பலி!
வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, தண்டையார்பேட்டை மார்க்கமாக சூலூர்பேட்டை வரை மின்சார ரயிலும் அதேபோல் பெரம்பூர், வில்லிவாக்கம், வேப்பம்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரை மின்சார ரயிலும், சென்னை கடற்கரை மார்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. […]













