கேரள முதல்வர் கண்ணில் குத்திய NCC மாணவர்… அரசு விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் NCC மாணவர் அணிவகுப்பு நடையில் செல்ல முயன்றபோது அவரது கை முதல்வரின் கண்ணில் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில், மாநில அமைச்சர், முதல்வர் தொகுதிகளில் ஆய்வு செய்யும் நவ கேரள சதாஸ் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், NCC மாணவர்கள் மேடைக்கு வந்து முதல்வருக்கு சல்யூட் அடித்து புத்தகம் வழங்கி செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஒரு NCC மாணவர், முதல்வர் பினராயி […]













