இலங்கை

இலங்கையில் விபத்துக்குள்ளான பேருந்து – 30 பேர் காயம்

பொலன்னறுவை – மனம்பிட்டிய – வெலிகந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

காயமடைந்தவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையிலும் ஏனையோர் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் அரிசி ஆலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்