பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீது முறைப்பாடு!
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் அதிகாரிகளை அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு, குறித்த அதிகார சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் […]













