பொழுதுபோக்கு

அதிரடியாக ரிலீஸ் தேதியை மாற்றிய ஜெயிலர்… அடங்கிப்போன பரிதாபம்

  • August 8, 2023
  • 0 Comments

வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு பிறமொழி ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் மலையாளத்தில் இந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெயிலர் என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் […]

ஆசியா

சீனா- தன்னை அவமானப்படுத்திய கடைக்காரை வித்தியாசமாக பழிதீர்த்த வாடிக்கையாளர்!(வீடியோ)

  • August 8, 2023
  • 0 Comments

சீனாவில் நூடில்ஸ் வாங்க சென்ற நபரை கடைக்காரர் அவமானப்படுத்தியதால், கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கி தரையில் போட்டு அடித்து நொருக்கி அழித்த சாம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,சீனாவின் சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் சென்றுள்ளார்.அங்கு கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இலங்கை மதிப்பில் ரூ.640 என கூறியுள்ளார். அதை கேட்ட வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். […]

இலங்கை

பொது போக்குவரத்து சேவைகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம்! பந்துல குணவர்தன

பொது போக்குவரத்து சேவைகளில் இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏழு தேசிய பேருந்து சங்கங்கள் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண மட்டத்திலும் இது தொடர்பில் விரைவில் கருத்துக்கள் பெறப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

போலி காசோலையை கொடுத்து மோசடி செய்த நபர் – கைது செய்த பொலிஸார்

  • August 8, 2023
  • 0 Comments

மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு வாகனமொன்றை ஒருவர் வாங்கியுள்ளார். அதற்குரிய காசோலையை வழங்கியபோது, வங்கியில் பணம் இல்லாமையால் அது திரும்பியுள்ளது. வாகனத்துக்குரிய பணத்தை கேட்டபோது விரைவில் அதனைத் தருவதாக் கூறி ஏமாற்றிவிட்டு, வாகனத்துடன் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் மாவிட்டபுரத்தில் மேற்படி வாகனம் மின்ஒழுக்கு காரணமாக எரிந்துள்ளது. இதனால் வாகனத்தோடு தலைமறைவானர் […]

இலங்கை

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு!

270 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நுரைச்சோலை நிலக்கரிமின் நிலையத்தின் ஒரு அலகு இன்று அதிகாலை பழுதடைந்துள்ளது. ஆலையில் உள்ள மூன்று மின் உற்பத்தி அலகுகளில், தற்போது ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜூன் மாதத்தில் மற்றுமொரு யூனிட் (270MW) நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

ஐரோப்பா

இத்தாலியில் சீஸ் கட்டிகள் சரிந்து விழுந்து ஒருவர் பலி!

  • August 8, 2023
  • 0 Comments

வடக்கு இத்தாலியின் பெர்கமோ அருகே பால் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் 25,000 சீஸ் கட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அலமாரிகள் சரிந்து விழுந்தால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 74 வயதான கியாகோமோ சியாப்பரினி என்ற நபரே உயிரிழந்துள்ளார். சீஸ் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 40 கிலோ எடையுள்ளவை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த உலோக அலமாரி எவ்வாறு சரிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் பொருள் சோர்வு அல்லது தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கை

நாடாளுமன்ற பெண் பணியாளர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த புகார்கள் குறித்து உள்ளக விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

ஐரோப்பா

அண்டார்டிகாவில் உடையும் பனிப்பாறைகள் : கலக்கத்தில் விஞ்ஞானிகள்!

  • August 8, 2023
  • 0 Comments

அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறைகள் உடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ஆராய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் குழு இன்று (08.08) எச்சரித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெல்ஸில் மிகப் பெரிய பனிப்பாறைகள் உடைந்திருப்பதாக கூறப்படுகிறது. UK வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துருவப் பகுதிகளின் தலைவர் ஜேன் ரம்பிள் அண்டார்டிகாவில் என்ன நடக்கிறது என்பதை […]

பொழுதுபோக்கு

கமலஹாசன் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் படம் தொடர்பான புதிய அறிவிப்பு

  • August 8, 2023
  • 0 Comments

‘மாவீரன்’  படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ‘எஸ்கே 21’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்தை ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் பராமரிப்பு பணியாளர்களில் உள்வாங்கப்பட்டுள்ள பெருமளவான இந்தியர்கள்!

  • August 8, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியாளர்களில் பெருமளவானவர்கள் இந்தியர்கள் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இடம்பெயர்வு ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில், திறமையான வேலை விசாக்களுக்காக நிதியுதவி பெற்ற பெரும்பாலான பராமரிப்புப் பணியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் குடியேற்ற அமைப்பு 2022-2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான தொழிலாளர்களை சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு […]