துருக்கியில் கோர விபத்தில் சிக்கிய இலங்கையர்கள்! வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்
ஆகஸ்ட் 09 ஆம் திகதி துருக்கியில் பேருந்து விபத்தில் சிக்கிய இலங்கை பணியாளர்கள் குழு மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்தான்புல்லில் உள்ள துருக்கி மாவட்டமான Eyupsultan என்ற இடத்தில் இலங்கை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி 6 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில், அவர்கள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கட்டுமானப் பணியின் பணியை முடித்துவிட்டு தங்களுடைய தங்குமிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். […]












