இலங்கை

போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க வந்த இருவர் கைது!

போலியாக தயாரிக்கப்பட்ட சீன நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயற்சித்த இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க  விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து குறித்த இருவரும் இன்று (12.08) கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதான இருவரும் திபெத் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர். இந்நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் அல் ஜசீரா விமானத்தில் குவைத் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

குவைத்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்று அங்கிருந்து நெதர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.

விமானத்தில் ஏறுவதற்கான அட்டையை பெறுவதற்காக அல் ஜசீரா விமான சேவையின் கருமப்பீடத்திற்கு சென்றுள்ள நிலையில், அவர்களின் கடவுச்சீட்டை ஆராய்ந்த நிலையில் போலி கடவுச்சீட்டுகள் என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்