உலகம்

கிரீஸ் காட்டுத்தீ!: காட்டில் பதினெட்டு உடல்கள் கண்டெடுப்பு

கடந்த நான்கு நாட்களாக காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வடக்கு கிரீஸின் வனப்பகுதியில் 18 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரேக்க தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பிரேத பரிசோதனைக் குழு மற்றும் விசாரணைக் குழு தாடியா காட்டில் சம்பவ இடத்திற்குச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கிய எல்லையில் இருந்து வெகு தொலைவில் உள்ள வடகிழக்கு கிரீஸின் எவ்ரோஸ் பகுதி தீயினால் எரிந்து நாசமானது. கடலோர நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் புலம்பெயர்ந்தவர் என்று […]

இலங்கை

திருகோணமலை கடற்படை முகாமின் ஜெட்டி உடைந்ததில் பலர் காயம்!

  • August 22, 2023
  • 0 Comments

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ஜெட்டியின்  ஒரு பகுதி உடைந்ததில் பாடசாலை மாணவர்கள் இருவர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் முகாமுக்குள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்களுமே காயமடைந்துள்ளனர்.

ஆசியா

1000 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட மாணவர்கள்- ஆசிரியர்கள்; மீட்பு பணி தீவிரம்

  • August 22, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மற்ற மாணவ மாணவிகள் தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 1000 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்கிறார்கள். இன்று காலை அந்தரத்தில் கேபிள் கார் சென்று கொண்டிருக்கும் போது கேபிள் உடைந்ததால் கேபிள் கார் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதில் பயணம் செய்த 6 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் 1000 அடி உயரத்தில் கேபிள் […]

இலங்கை

இலங்கையில் தேசிய கீதத்தை பாட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

  • August 22, 2023
  • 0 Comments

தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியுள்ளாரா என ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தேசிய கீதத்தை எவ்வாறு பாடுவது என்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் இருந்தாலும், தேசிய கீதம் நடுவில் பாடப்பட வேண்டும் […]

பொழுதுபோக்கு

செல்வராகவனுடனான திருமணத்தால் நிறைவேறாத ஆசை! சோனியா அகர்வால் பகிர்ந்த தகவல்

இயக்குநர் செல்வராகவனைத் திருமணம் செய்ததால் தான் என்னுடைய அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை என நடிகை சோனியா அகர்வால் பகிர்ந்துள்ளார். இயக்குநர் செல்வராகவனுக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு பிரிந்தனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ”இப்போதெல்லாம் திருமணம் ஆனாலும், குழந்தைகள் பெற்றாலும் நடிகைகள் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நானும் அப்படி […]

இலங்கை

சட்டத்தை கையில் எடுக்காதீர்கள் – திரான் அலஸ் கோரிக்கை!

  • August 22, 2023
  • 0 Comments

யாரேனும் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தால் அதற்கு  எதிராக அந்தஸ்த்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர்  திரன் அலஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்களைத் தூண்டும் வகையில் பொதுப் […]

இந்தியா

பயணி வாந்தி எடுத்ததால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!

இந்தியாவின் மும்பை மாநகரிலிருந்து திங்கட்கிழமை இரவு ராஞ்சி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், நாக்பூர் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணி ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவ்விமானம் நாக்பூரில் தரையிறங்கியது. நீண்டநாள் சிறுநீரகக் கோளாற்றாலும் காசநோயாலும் பாதிக்கப்பட்டிருந்த அந்த 62 வயது ஆடவர் விமானத்திலேயே ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, நாக்பூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பயணி, பின்னர் மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது. 6E 5093 என்ற அவ்விமானம் மருத்துவக் காரணத்திற்காக நாக்பூரில் தரையிறக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனப் […]

இலங்கை

சிங்கப்பூர்- இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் கைச்சாத்து

  • August 22, 2023
  • 0 Comments

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ பேச்சுக்களை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் அவதானம் செலுத்தியிருந்ததோடு, பரந்த பொருளாதார ஒருமைப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது. […]

இலங்கை

குடிநீர் தேவையை அவசர சேவையாக கருத தீர்மானம்!

  • August 22, 2023
  • 0 Comments

குடிநீரின் தேவையை அவசர சேவையாக  கருதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, அவசர நடவடிக்கை குழுவின் ஊடாக கூட்டு விரைவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளததாகவும் அவர் கூறியுள்ளார். நீர் வழங்கல், நீர்ப்பாசனம், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. மேற்படி மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, அது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் இதில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஐரோப்பா

கிளர்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட பிரிகோஜின்!

  • August 22, 2023
  • 0 Comments

கடந்த ஜூன் மாத இறுதியில் வெடித்த முழுமையற்ற எழுச்சிக்குப் பிறகு, ரஷ்ய வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் முதல் முறையாக வீடியோ அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். வாக்னர் குழுவைச் சேர்ந்த டெலிகிராம் சேனல்கள் மூலம் பரப்பப்பட்ட இந்த வீடியோ, ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வாக்னர் குழுமத்தின் தலைவர் இப்போது ஆப்பிரிக்காவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆபிரிக்காவில் மோதல்கள் நிறைந்த மாநிலங்களில் வாக்னர் குழுவின் செயல்பாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் தற்போதைய செயல்பாடு பற்றிய […]