இந்தியா

மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது விபத்து – 17 பேர் பலி!

  • August 23, 2023
  • 0 Comments

இந்தியாவின் மிசோரமில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து  நடந்த போது 35 முதல் 40 தொழிலாளர்கள் இருந்ததாகவும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இறந்தவர்களுக்கு 2 லட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 இந்திய ரூபாயும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இலங்கை

முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி; சரத் வீரசேகர மன்றத்தில் கருத்து

  • August 23, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன். குருந்தூர் மலையில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு. அதை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற […]

ஐரோப்பா

பொருளாதார தடைகள் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை விமர்சித்த புதின்

  • August 23, 2023
  • 0 Comments

அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் சட்டவிரோதமான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச பொருளாதார நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் காணொளி வாயிலாக ரஷ்ய அதிபர் புதின் உரை நிகழ்த்தினார். சில நாடுகளில் ரஷ்யாவின் சொத்துகள் முடக்கப்பட்டதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதும் சட்டவிரோதமானது என்றும் புதின் தெரிவித்தார். பொருளாதார வாழ்வையும், சுதந்திரமான வர்த்தகத்திற்கான அடிப்படை விதிகளையும் நசுக்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை புதின் கடுமையாக விமர்சித்தார். இந்த பொருளாதார தடைகளால் […]

இலங்கை

யாழ். விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதர்

  • August 23, 2023
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார். யாழ்ப்பாணம் பொது சன நூலகத்துக்கு இன்று காலை விஜயம் செய்து பார்வையிட்டார்.

இலங்கை

இலங்கையில் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை!

  • August 23, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் வைக்கோல், கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள் மற்றும் கரண்டிகள், மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

ஆசியா

ஈராக்- பிரமாண்ட மின்னணு திரையில் ஓடிய ஆபாச படம்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

  • August 23, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக், கலாச்சார ரீதியாக கடுமையான சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஈராக்கில் முழுமையாக அவற்றை தடை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனை அப்பகுதியில் […]

இலங்கை

ஆய்வு கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு அனுமதி கோரும் சீனா!

  • August 23, 2023
  • 0 Comments

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் சிக்ஸ்’ இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் சீனா அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆய்வுக் கப்பல் வரும் திகதி குறித்து சீன அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் அந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன ஆய்வுக் கப்பல் ‘ஷீ யான் சிக்ஸ்’ வரும் அக்டோபரில் கொழும்பு மற்றும் […]

பொழுதுபோக்கு

எக்கச்சக்கமாக எகிறிய பட்ஜெட்… அப்செட் ஆன கேப்டன் மில்லர் தயாரிப்பு நிறுவனம்

  • August 23, 2023
  • 0 Comments

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தென்தமிழகத்தில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. […]

இலங்கை

கடிதம் எழுதிவிட்டு ஒருவயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்!

  • August 23, 2023
  • 0 Comments

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது ஒரு வயதுடைய மகளுமே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். உயிரிழந்த பெண், தானும் குழந்தையும் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அத்துடன் கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள […]

இலங்கை

பாராளுமன்றத்தில் அமளி : சபையில் இருந்து இரு எம்பிகள் வெளியேற்றம்!

  • August 23, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரம் தொடர்பான பிரச்சினை காரணமாக சூடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்போது, ​​பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையில் இருந்து நீக்குவதற்கு பிரதி சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். சபையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக, பிரதி சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அதன்படி, அவையில் இருந்து வெளியே வந்த இரண்டு எம்.பி.க்களும் முகநூல் சமூக வலைத்தளம் மூலம் நேரலையில் கருத்து […]