ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சதித்திட்டம் குறித்து சுயாதீன சர்வதேச குழு விசாரிக்க வேண்டும்! கார்டினல் மல்கம் ரஞ்சித்
இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சதித்திட்டம் குறித்து ‘சுதந்திரமான, பக்கச்சார்பற்ற, நீதியான, வெளிப்படையான மற்றும் பரந்த’ விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் கார்டினல் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். . இன்று (செப். 06) கொழும்பு பேராயர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளின் உதவியுடன் சுதந்திரமான சர்வதேச புலனாய்வுக் குழுவின் ஊடாக இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் […]













