கிரிமிட்டிய பகுதியில் நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவர் இன்று (09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன்( 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீரோடையில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டனர். நானுஓயா கிரிமிட்டி […]













