பொழுதுபோக்கு

“தளபதி 68” ஹீரோயின்களை வலைவீசி தேடும் VP… ஆனால் இவர்களுக்கு மட்டும் தடை

தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் உறுதியாக வில்லை என்றாலும் படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு தான் என்பது மட்டும் ஓரளவுக்கு கணிக்கப்பட்டு இருக்கிறது.

வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் என்றாலே அது கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தான் அமையும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. ஆனால் தளபதி 68 யுவன் இசை வேண்டாம் என விஜய் சொல்லி இருப்பதாகவும் அவருக்கு பதில் இசையமைப்பாளர் அனிருத்தை பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேபோன்று வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே அதில் பிரேம்ஜி இல்லாமல் இருக்காது. ஆனால் தளபதி விஜய் பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பதற்கும் முட்டுக்கட்டை போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி இல்லாமல் வெங்கட் பிரபுவின் படம் என்பது சாத்தியமா இல்லையா என்பது இனி வரும் அப்டேட்டுகளில் தான் தெரியும்.

இந்நிலையில் தளபதி 68ல் நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இந்தப் படத்தில் நடிப்பதற்கு இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம். அதில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றொருவர் நடிகை சாய் பல்லவி.

அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் முடிவடைந்த பிறகு இவர்கள் இருவரில் ஒருவர் இந்த படத்தில் நடிப்பார்கள்.

தளபதி 68 அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றும், மேலும் இதில் கதாநாயகிக்கு முக்கியமான இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனால் நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கால்ஷீட் அல்லது சம்பள பிரச்சனை ஏதாவது நடந்தால் கண்டிப்பாக சாய் பல்லவி கதாநாயகியாக நடிப்பார்.

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content