அமெரிக்க முன்னாள் மேயர் மற்றும் மகளை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்
லூசியானா நகரின் முன்னாள் மேயர் மற்றும் அவரது மகளை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 11 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
82 வயது ஜோ கொர்னேலியஸ் சீனியர் மற்றும் அவரது மகள், 31 வயதான கெய்ஷா மைல்ஸ், பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
துப்பாக்கிதாரி “உறவினர் அல்லது குடும்ப உறுப்பினர்” என்பதனால் சிறுவனின் பெயரை போலீசார் குறிப்பிடவில்லை.
சிறுவன் மீது தற்போது இரண்டு முதல் தர கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு செய்தி மாநாட்டில், Minden, Louisiana காவல்துறைத் தலைவர் Jared McIver “நகரம் அதிர்ச்சியில் உள்ளது, ஆனால் குற்றத்தைச் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதால் நகரம் நிம்மதியாக இருக்கிறது.” என தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் கொலை ஆயுதங்கள் என நம்பப்படுகிறது.