வேல்ஸில் ரோயல் படையின் பயிற்சி விமானம் விபத்து
வேல்ஸின் ஆங்கிள்சே Anglesey தீவில் உள்ள பென்கார்னிசியோக் Pencarnisiog பகுதியில் ரோயல் படையின் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் இரண்டு விமானிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
காவல்துறை, தீயணைப்புப் படையினர், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இரண்டு விமான ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பரந்த அளவிலான காயங்களோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று வடக்கு வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதுடன், பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது.
ஆங்கிள்சே தீவில் உள்ள RAF வேலி, ரோயல் ஏர் ஃபோர்ஸின் போர் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான ஒரு முக்கிய மையமாகச் செயல்படுகிறமை குறிப்பிடத்தக்கது.





