மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம் – நாளை பொதுக்கலந்தாய்வு
2026-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் உயர்த்துமாறு தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டாளர் (NSO), கோரியுள்ளது.
இருப்பினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 1.46 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள பொதுக் கலந்தாய்விற்குப் பின்னரே, முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று PUCSL தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், 0770399119 என்ற எண்ணிற்கு அழைத்துத் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று PUCSL குறிப்பிட்டுள்ளது.
பொதுக் கலந்தாய்வு செயல்முறைக்குப் பிறகு, இறுதி மின் கட்டண திருத்தம் அறிவிக்கப்படும்.



