இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார்.

இந்தச் சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பின் மூலம் எவ்வாறு அரசியலை நகர்த்தலாம் என்ற விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்தும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content