ஆப்பிரிக்கா

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் பலி!

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக   ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கால் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்றாலும் தற்சமயம் அது ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு

You cannot copy content of this page

Skip to content