உலகம்

குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க தீர்மானம் – நியூயார்கில் புதிய சட்டம்

நியூயார்க் நகர மன்றம், 2028 ஜூன் மாதம் முதல் நகர வீதிகளிலும் சென்ட்ரல் பார்க்கிலும் குதிரை வண்டிகளுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

நகரத்தின் 51 சட்டமன்ற உறுப்பினர்களில், 40 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஏழுபேர் இதற்கு எதிராக வாக்களித்தனர், இருவர் வாக்களிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீண்டகாலம் நடைமுறையில் இருந்த குதிரை சவாரி தொழில் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீர்மானத்திற்கு  மேயர் ஜோஹ்ரான் மம்தானி Zohran Mamdani, ஆதரவளித்துள்ளார்.

அவர் அக்டோபர் மாத தொடக்கத்தில், குதிரை வண்டித் தொழில் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்