இலங்கை செய்தி

இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை – மர்ம நபர்களால் அதிர்ச்சி

இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த  3 பேர் கொண்ட கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினமான பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பெணிணடம்,  வீடு ஒன்று வாடகைக்கு தேவை எனக் கேட்டு அங்கு 3 இளைஞர்கள் சென்று அந்த பெண்ணிடம் கதை கொடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து திடீரென பெண் மீது தாக்குதலை நடத்திவிட்டு அவரின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் கையில் இருந்த காப்பு என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததுடன் இந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து  அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content