இலங்கை செய்தி

இலங்கையில் எடை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம்!

இலங்கையில் எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பழுப்பு நிற முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவென என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக அதிக விலைக்கு முட்டைகளை எடை அடிப்படையில் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்திருந்த நிலையில், இதன்படி வெள்ளை முட்டை 44 ரூபாவாகவும் பழுப்பு நிற முட்டை 46 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content