அரசியல் இந்தியா செய்தி

தவெகவுக்கு ஆதரவு இல்லை: அதிமுக திட்டவட்டம்! தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!!

தவெக ஆட்சியமைப்பதற்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில், அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

அதில், ”தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்றால், அதிமுக அழிவுப் பாதைக்கு சென்றுவிடும்.

வெளியில் இருந்து ஆதரவு அளித்தால், தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டியது தானே என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும்.

அதனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை” என்று முடிவெடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ”தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

அதேவேளை, அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் பரிசீலித்துவருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!