அறிவியல் & தொழில்நுட்பம்

வீதி போக்குவரத்து சோதனை சாவடியில் மனித ரோபோக்களை களமிறக்கிய சீனா!!

கூட்டத்தை கட்டுப்படுத்த  உதவும் வகையில் சோதனை சாவடிகள் உள்பட முக்கிய இடங்களில் சீனா தனது   முதல் ரோபோ காவல் படையை களமிறக்கியுள்ளது.

தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஹாங்சோவில் (Hangzhou) 15 மனித உருவ போக்குவரத்து மேலாண்மை ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமீறல்களை சுட்டிக்காட்டுதல், போக்குவரத்தை நெறிப்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொள்கின்றன.

இருப்பினும், இந்த ரோபோக்களின் இருப்பு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியது. ஏனெனில்,  மக்கள் தெருக்களிலும் பாதசாரி கடக்கும் இடங்களிலும் கூடி, இந்தப் புதிய ரோபோக்களுடன் காணொளிகளை பதிவு செய்தனர்.

இந்தத் தொழில்நுட்பம், மனித அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் போக்குவரத்துப் பணிகளில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, மாரத்தான் போன்ற போட்டிகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணொளி

https://cdn.jwplayer.com/previews/Zvf5rAvL

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!