வனுவாட்டுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை
தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.




