உலகம்

வனுவாட்டுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை

  • October 24, 2026
  • 0 Comments

தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. இதுவரை உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

ஐரோப்பா

சிசிலியில் 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவு – சுனாமி எச்சரிக்கை

  • October 23, 2026
  • 0 Comments

இத்தாலி – சிசிலியின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால், 5.7 ரிக்டர் அளவு வரையிலான 12 தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு நிற சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலேர்மோ Palermo, மெசினா Messina, டிராபானி Trapani  மற்றும் லிபாரி Lipari ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் பலேர்மோவிலிருந்து Palermo  60 மைல்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்திருந்ததுடன், தீவில் உள்ள பல நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக […]

உலகம் முக்கிய செய்திகள்

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலா தலைநகர் கராகஸ் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் அதிர்வுகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளன. மொன்டால்பன் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், 13.2 கிலோமீட்டர் (8.2 மைல்கள்) ஆழமாகவும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே  நிலநடுக்கத்தை தொடர்ந்து வெனிசுலா, அருபா மற்றும் பொனாயர் ஆகிய நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முக்கிய செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • April 20, 2026
  • 0 Comments

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச உதவிகள் முறையாக பங்கீடு: தேரர் பாராட்டு!

  • December 13, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்கள் எமக்கு உள்ளன. சுனாமி மற்றும் கொரோனா காலகட்டங்களின்போது கொள்ளைகள் இடம்பெற்றன. அரசியல் வாதிகள் மோசடிகளில் ஈடுபட்டனர் தமது சொத்துகளை பெருக்கிக்கொண்டனர். இதனால் நாடு மீண்டெழ இருந்த சந்தர்ப்பம் இல்லாமல்போனது.எனினும், இந்த ஆட்சியில் அப்படி நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. […]