நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை நிதியுதவி
நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நிதியுதவி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணத்தையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.




