உலகம் செய்தி

ஈராக்கில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ: நால்வர் பலி – பலர் காயம்

ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள பஸ்ரா மாகாணத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள பஸ்ரா மாகாணத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ்ரா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஹர்தா (Hartha) மின் உற்பத்தி நிலையத்தில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தீயணைப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும், தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதுடன், மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

800 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்ட குறித்த நிலையம், தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னர் சுமார் 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதங்களின் முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஈராக்கின் மின்சாரக் கட்டமைப்பு பல தசாப்தங்களாக போதிய முதலீடு இல்லாமை, முறையான பராமரிப்பின்மை மற்றும் அதிகரிக்கும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் ஏற்படும் தீ விபத்துகள், தொழில்நுட்பக் கோளாறுகள் ஆகியவை ஏற்கனவே அந்நாட்டின் மின்சார விநியோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி, பரவலான மின்தடைக்கு காரணமாகியுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி