இந்தியா செய்தி தமிழ்நாடு

இடைத்தேர்தலில் சீமான் மீண்டும் போட்டி

தமிழகம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழகம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சீமான் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். அம்பாசமுத்திரம் தொகுதியில் மட்டுமில்லை, எப்போதும் எல்லா இடங்களிலும் நான் பொது வேட்பாளர். எல்லாருக்கும் நாங்கள் பொது வேட்பாளர்கள்.

பொது வேட்பாளர் என்ற கருத்தே தவறானது. அனைத்து சாதியினருக்கும் நான் பொது வேட்பாளர்தான். கடந்த 16 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடுகிறோம். தோல்வியுற்றேன், ஆனால் துவண்டுவிடவில்லை.

திரைக் கவரச்சி என்பது மங்கும். இன எழுச்சி அரசியல் எழும். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டுதான் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சீமான் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி