அர்ச்சுனாவுக்கு செருப்புமாலை
யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் அன்றும், இன்றும், என்றும் மஹிந்தவே ஜனாதிபதி என்று கூறி சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தார்.
யாழ்ப்பாண மக்களால் சுயேட்சையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அர்ச்சுனா தற்போது மஹிந்த அணிக்கு சார்பாக பேசும் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
இது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




