இலங்கை

அர்ச்சுனாவைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்ய இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகத் தவறியதையடுத்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவரது ஜாமீன்தாரர்களும் ஆஜராகவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

அர்ச்சுனாவுக்கு செருப்புமாலை

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் அன்றும், இன்றும், என்றும் மஹிந்தவே ஜனாதிபதி என்று கூறி சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தார். யாழ்ப்பாண மக்களால் சுயேட்சையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அர்ச்சுனா தற்போது மஹிந்த […]

இலங்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல் – அர்ச்சுனா முழக்கம்!

  • June 10, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எனது உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்  சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது தொடர்பில் நான் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கூறி வருகின்றேன். ஆனால் அது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.கவனம் செலுத்தப்படவில்லை. எனது […]