Golden Boot பந்தயம்:மெஸ்ஸி மீண்டும் முதலிடம்
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் (Round of 16) சுற்றில் எகிப்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 8-வது கோலை பதிவு செய்து, தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கான ‘தங்கக் காலணி’ (Golden Boot) விருதுப் பந்தயத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரின் இறுதியில் அதிக கோல்களை அடிக்கும் வீரருக்கு FIFA தங்கக் காலணி விருது வழங்கப்படும்.
2022 கத்தார் உலகக் கிண்ணத்தில் 8 கோல்களை அடித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே தான் தற்போதைய தங்கக் காலணி வெற்றியாளர் ஆவார்.
சமநிலை விதி 1 (Assists): தொடரின் முடிவில் இரண்டு வீரர்கள் சம எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருந்தால், சக வீரர்களுக்கு அதிக கோல் அடிக்க உதவிய (Assists) வீரருக்கு இவ்விருது வழங்கப்படும்.
சமநிலை விதி 2 (Least Minutes): கோல் உதவி (Assists) எண்ணிக்கையும் சமமாக இருக்கும் பட்சத்தில், மிகக் குறைந்த நிமிடங்கள் களத்தில் விளையாடி இந்த இலக்குகளை எட்டிய வீரருக்கு தங்கக் காலணி விருது வழங்கப்படும்.
உலகக் கிண்ணம் 2026: அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல்
லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) – 8 கோல்கள், 1 கோல் உதவி
கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) – 7 கோல்கள், 2 கோல் உதவி
எர்லிங் ஹாலாண்ட் (நார்வே) – 7 கோல்கள், 0 கோல் உதவி
ஹாரி கேன் (இங்கிலாந்து) – 6 கோல்கள், 1 கோல் உதவி
உஸ்மான் டெம்பேலே (பிரான்ஸ்) – 4 கோல்கள், 2 கோல் உதவி
மிகெல் ஓயர்சபால் (ஸ்பெயின்) – 4 கோல்கள், 1 கோல் உதவி
ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இவ்விருதை வென்றவர்கள் யார்?
தற்போது விளையாடி வரும் எம்பாப்பே, ஹாரி கேன் மற்றும் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் ஆகியோர் இரண்டாவது முறையாக இந்த விருதுக்கான பந்தயத்தில் உள்ளனர்.
இங்கிலாந்தின் ஹாரி கேன் 2018 (ரஷ்யா) உலகக் கிண்ணத்திலும், கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 2014 (பிரேசில்) உலகக் கிண்ணத்திலும் அதிக கோல் அடித்தவர்களுக்கான விருதை வென்றனர்.
உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் இந்த விருதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கால் இறுதிச் சுற்றுகள் தொடங்கவுள்ள நிலையில், வரும் வியாழக்கிழமை மொராக்கோவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவுக்கு தனது கோல் எண்ணிக்கையை உயர்த்தும் முதல் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக கோல் அடித்தவர் யார்?
1958 ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் பிரான்ஸ் அணியின் முன்கள வீரர் ஜஸ்ட் Just Fontaine 13 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக 1954 இல் சாண்டர் கோக்சிஸ் 11 கோல்களையும், 1970 இல் மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லர் 10 கோல்களையும் அடித்துள்ளனர்.
உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள்
லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) – 21 கோல்கள்
கைலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) – 19 கோல்கள்
மிரோஸ்லாவ் குளோச (ஜெர்மனி) – 16 கோல்கள்
ரொனால்டோ (பிரேசில்) – 15 கோல்கள்




