டொமினிகன் குடியரசின் கடற்கரை விடுதியில் தீவிபத்து – பெண் பலி
டொமினிகன் குடியரசின் பயாஹிபே கடற்கரை ரிசார்ட்டில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் இத்தாலியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் மருத்துவ சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பனை ஓலையால் ஆன கூரை அமைப்புகளின் சில பகுதிகள் […]




